நேரம் (திரைப்படம்)

நேரம்
இயக்கம்அல்போன்சு புதரன்
கதைஅல்போன்சு புதரன்
இசைராஜேஷ் முருகேசன்
நடிப்புநிவின் பவுலி
நஸ்ரியா நசீம்
சிம்கா
நாசர்
தம்பி ராமையா
ஒளிப்பதிவுஆனந்து சி. சந்திரன்
படத்தொகுப்புஅல்போன்சு புதரன்
கலையகம்வின்னர் புல்ஸ் பிலிம்ஸ்
விநியோகம்மலையாளம்
லால் ஜோஸ் பிலிம்ஸ்
தமிழ்
ரெட் ஜியன்ட் மூவீஸ்
வெளியீடுமலையாளம்
10 மே 2013 (2013-05-10)
தமிழ்
17 மே 2013 (2013-05-17)
ஓட்டம்மலையாளம்
109 நிமிடங்கள்
தமிழ்
117 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ், மலையாளம்

நேரம், நகைச்சுவை மற்றும் பரபரப்பு பாணியில் அல்போன்சு புதரன் இயக்கி, 2013 இல் வெளிவந்த தென்னிந்தியத் திரைப்படம் ஆகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும், மலையாளத்திலும் படமாக்கப்பட்டது. இதில் நிவின் பவுலி, நஸ்ரியா நசீம், சிம்கா, நாசர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

இந்தப் படமே நிவின் பாலிக்கு முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2]

கதைச் சுருக்கம்

[தொகு]

வேலையில்லாத மென்பொருளாளர் தங்கையின் திருமணத்திற்காக வட்டி ராஜாவிடம் வாங்கிய கடன் தவணைக்கு கடைசி நாள், அந்நேரம் பார்த்து காதலி வீட்டில் பிரச்சனை, அவள் தனது வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள். சரி பிரச்சனையை பார்ப்போம் என்றால், காதலியின் கழுத்து செயின் திருடு போய்விடுகிறது. இப்படி கவனக்குறைவாக இருப்பியா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே நண்பனிடமிருந்து வட்டி ராஜாவுக்கு கொடுக்கப் போன பணம் திருடு போக, பெண்ணின் அப்பா காவல்துறையில் புகார் செய்திருக்க, முடிவாக என்ன ஆனது என்பதை இயக்குநர் திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்.

நடிப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-02. Retrieved 2013-05-07.
  2. http://www.sify.com/movies/neram--nivin-pauly-s-first-tamil-film-imagegallery-kollywood-nc2mvciehge.html