நைக்டிபாட்ராச்சசு பெட்ரேயசு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றவை
|
குடும்பம்: | நைக்டிபேட்ராச்சிடே
|
பேரினம்: | |
இனம்: | நை. பெட்ரேயசு
|
இருசொற் பெயரீடு | |
நைக்டிபேட்ராச்சசு பெட்ரேயசு தாசு & குந்தே, 2005 | |
![]() |
நைக்டிபாட்ராச்சசு பெட்ரேயசு (Nyctibatrachus petraeus) என்பது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் நிக்டிபாடராக்கிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும்.
நை. பெட்ரேயசு குட்டையான உடலினையும் மழுங்கிய மூக்கினையும் உடையது. முதிர்வடைந்த ஆண்கள் 32 முதல் 47 மூக்கு-குத வரம்பினைக் கொண்டுள்ளது. இது பெண் தவளையில் 37 முதல் 45.5 மிமீ ஆக உள்ளது. தலை நீளத்தை விட அகலமானது. தலையின் அகலம் மற்றும் நீளம் விகிதம் 1.55 ஆகும். ஆண் பெண் தவளைகளிடையான பாலின வேறுபாடு சிறிதளவே காணப்படும். தொடையின் உள் பக்கத்தில் நீளமான தொடை சுரப்பிகள் இருப்பதால் ஆண்களை பெண் மற்றும் இளம் வயதினரிடமிருந்து வேறுபடுத்தி அறியலாம். ஆண் தவளைகளுக்கு வெளிப்புற குரல் பைகள் இல்லை. நாக்கின் ஒவ்வொரு பக்கத்திலும் திறப்புகளுடன் உள் குரல் பைகள் காணப்படும்.[2]
இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[3]