நைஜீரிய ஆங்கிலம் (Nigerian English) என்பது நைஜீரியாவில் பேசப்படும் ஆங்கிலமாகும். இது பிரித்தானிய ஆங்கிலத்தை அடிப்படையாக்க் கொண்டது. ஆனால் சமீபகாலத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு காரணமாக, அமெரிக்க ஆங்கிலச் சொற்கள் நைஜிரிய ஆங்கில மொழியாக மாறியது. கூடுதலாக சில புதிய சொற்கள் நைஜிரிய கலாச்சாரத்தை குறிப்பதன் அவசியத்திற்காக உருவாக்கப்பெற்றது. (எ.கா. மூத்த மனைவி).
நைஜீரிய பிட்யின், ஆங்கிலத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு பிட்யின் கிரியோல் மொழியாகும். இது பெரும்பாலும் முறைசாரா உரையாடல்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நைஜீரியத் தரமான ஆங்கிலம் அரசியல், கல்வி , ஊடகம் மற்றும் பிற அதிகாரப்பூர்வ பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.