நைட்ராக்சிலிக் அமிலம் (Nitroxylic Acid) அல்லது ஐதரோநைட்ரசு அமிலம் ஒரு நிலைத்தன்மையற்ற, ஒடுக்கப்பட்ட ஆக்சோநைட்ரசன் அமிலம் ஆகும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு H4N2O4 ஆகும். இதில் உள்ள நைட்ரசனானது +2 ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டுள்ளது.[1] இதன் தொடர்புடைய எதிர் மின்னயனி நைட்ராக்சிலேட் அயனி N2O4− 4 அல்லது NO2− 2 ஆகும்.
எட்வர்ட் பெட்போர்ட் மேக்சுடெட் என்பவர் திரவ அம்மோனியாவில் உள்ள சோடியம் நைட்ரைட்டை மின்னாற்பகுப்பு செய்யும் போது நைட்ராக்சிலிக் அமிலம் இருப்பதற்கான முதல் குறிப்பு உணரப்பட்டது. எதிர்மின்வாயில் பிரகாசமான மஞ்சள் நிறமுள்ள பொருள் சேகரமாகத் தொடங்கியது. இதை மேக்சுடெட் டைசோடியம் நைட்ரைட் என அழைத்தார். இந்த டைசோடியம் நைட்ரைட்டானது சோடியம் மற்றும் சோடியம் நைட்ரேட்டின் அம்மோனியக் கரைசல்களை, முற்றிலும் நீரே இல்லாத சூழ்நிலையில் கலப்பதன் மூலமும் பெறப்பட்டது. டைசோடியம் நைட்ரைட்டானது நீருடன் வினைபுரிந்து சோடியம் நைட்ரைட், சோடியம் ஐதராக்சைடு மற்றும் நீரியத்தைத் [2] தருகின்றது. டைசோடியம் நைட்ரைட்டைத் தயாரிப்பதற்கான வேறு முறைகளில், அம்மோனியம் நைட்ரேட்டுடன் சோடியத்தை வினைபுரியச் செய்வது, சோடியம் நைட்ரேட்டு கரைசலை மின்னாற்பகுப்பு செய்வது ஆகியவை அடங்கும். டைசோடியம் நைட்ரைட்டானது மிகவும் வெடிக்கக்கூடிய தன்மை உடையதாக இருப்பதால், இதனைத் தயாரிக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டவர்கள் தங்களது ஆய்வக உபகரணங்கள் அல்லது கண்ணாடிப் பொருட்கள் உடைவதை அதிகம் சந்திக்க நேரிட்டது. டைசோடியம் நைட்ரைட்டானது ஆக்சிசன் மற்றும் கார்பனீராக்சைடுடன் வெடிச்சத்தத்தை உருவாக்கும் வகையில் வினைபுரியும் தன்மை உடையவை.[3] இந்தப் பொருளானது தற்போது சோடியம் நைட்ராக்சிலேட் என அழைக்கப்படுகிறது. இதன் CAS எண்ணானது 13968-14-4 ஆக உள்ளது.
இலித்தியம் சோடியம் நைட்ராக்சிலேட்டும் LiNaNO2 கிடைக்கிறது. இது 130°செ வெப்பநிலையில் வெடிக்கிறது.[4]
நைட்ராக்சிலிக் அமிலமானது நைட்ரசு அமிலத்தை யூரோப்பியம்2+ அயனியால் ஒடுக்கப்படும் போது தயாரிக்கப்படலாம்.[5]
{{cite book}}
: More than one of |ISBN=
and |isbn=
specified (help); More than one of |first1=
and |first=
specified (help); More than one of |last1=
and |last=
specified (help)