தயாரிப்பாளர் | நோக்கியா |
---|---|
திரை | 1.8 இன்ச் (262 000 கலர்கள்) |
கேமரா | 640 x 480 பிக்ஸல்கலள் |
இயங்கு தளம் | சீரியஸ் 40 6ம் பதிப்பு சிறப்பு தொகுப்பு 1 |
நினைவகம் | 10 MB |
பிணையங்கள் | ஜி.எஸ்.எம் 900/1800 |
தொடர்பாற்றல் | புளுடூத் 2.1+EDR, மைக்ரோ-யுஎஸ்பி |
மின்கலன் | BL-5C 3.7 V 1020 mAh |
அளவு | 108 x 45 x 14.65 mm |
எடை | 74 g |
வடிவம் | கேன்டிபார் |
நோக்கியா சி2-00 என்பது ஒரு நோக்கியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கைபேசி ஆகும். இது தான் நோக்கியா நிறுவனம் முதன் முதலாக வெளியிட்ட இரண்டு சிம் கார்டுகளை இயக்கும் வசதி கொண்ட கைபேசி ஆகும்.
இந்த கைபேசியில் உள்ள முக்கிய சிறப்பு இதில் உள்ள இரட்டை சிம் வசதி ஆகும். மேலும் இந்த கைபேசியில் புகைப்படக்கருவி, புளுடூத், ஃப்ளாஷ் லைட் மற்றும் ஜாவா இயக்கம் போன்றவை அம்சங்களும் உள்ளன.