நோக்லாக் மாவட்டம்

நோக்லாக் மாவட்டம்
மாநிலம்நாகாலாந்து
நாடுஇந்தியா
தொகுதிநோக்லாக் சட்டமன்றத் தொகுதி
பரப்பளவு
 • மொத்தம்164.92 km2 (63.68 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்19,507
 • அடர்த்தி120/km2 (310/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)

நோக்லாக் மாவட்டம் (Noklak district) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த ஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து மாநிலத்தின் துயேன்சாங் மாவட்டத்தின் நோக்லாக் வருவாய் வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிய நோக்லாக் மாவட்டம், 21 டிசம்பர் 2017-இல் புதிதாக நிறுவப்பட்டது.[1][2][3][4] இது நாகாலாந்தின் 12-வது இம்மாவட்டம் ஆகும். இதன் தலைமையிடம் நோக்லாக் நகரம் ஆகும்.

புவியியல்

[தொகு]

நோக்லாக் மாவட்டம் 164.92 சகிமீ பரப்பளவு கொண்டது.[5] மலைப்பாங்கான நோக்லாக் மாவட்டம், அகன்ற இலைக்காடுகள் கொண்டது. துயேன்சாங் மாவட்டத்தின் நோக்லாக் பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம்

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

நோக்லாக் மாவட்டம் நோக்லாக், தொனொக்கின்யு, நோக்கு, பான்சோ மற்றும் சிங்மே என ஐந்து வருவாய் வட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டம் நோக்லாக் மற்றும் தொனொக்கின்யு என இரண்டு ஒன்றியங்களைக் கொண்டது.

இம்மாவட்டம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[6][7]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 3,667 வீடுகள் கொண்ட நோக்லாக் மாவட்டத்தின் மக்கள்தொகை 19,507 ஆகும். அதில் ஆண்கள் 10,066 மற்றும் பெண்கள் 9,441 ஆகவுள்ளனர்.சராசரி எழுத்தறிவு 61.41% ஆகவுள்ளது. இம்மாவட்ட மக்களில் 98.44% பழங்குடிகள் ஆவர். இம்மாவட்ட மக்களில் 98.47% கிறித்தவ பழங்குடி மக்கள் ஆவர். இம்மாவட்ட பழங்குடி மக்கள் பல மொழிகள் பேசினாலும் ஆங்கில மொழி கல்வி மற்றும் அரச மொழியாக உள்ளது.[8] இங்கு நகரங்கள் இல்லாததால், இம்மாவட்ட மக்கள் அனைவரும் மலைக்கிராமங்களில் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nagaland upgrades Noklak sub-division into district
  2. Nagaland upgrades Noklak sub-division into district
  3. "Noklak district creation". Archived from the original on 2018-01-04. பார்க்கப்பட்ட நாள் 2019-08-23.
  4. "Noklak is Nagaland’s youngest district". Eastern Mirror. 21 December 2017 இம் மூலத்தில் இருந்து 24 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190724183040/https://www.easternmirrornagaland.com/noklak-is-nagalands-youngest-district/. 
  5. "Noklak Taluk Population Tuensang, Nagaland, List of Villages & Towns in Noklak Taluk". Census of India. 2017. பார்க்கப்பட்ட நாள் 22 December 2017.
  6. "Noklak sub-div is now a district" (in en-gb). Nagaland Page. 22 December 2017 இம் மூலத்தில் இருந்து 23 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171223102417/http://www.nagalandpage.com/top-stories/40029-noklak-sub-div-is-now-a-district. 
  7. "List of Polling Stations" (PDF). Government of Nagaland. pp. 19, 23. Archived from the original (PDF) on 2017-12-23. பார்க்கப்பட்ட நாள் 2019-08-23.
  8. Noklak Taluk Population

வெளி இணைப்புகள்

[தொகு]