நோஷன் Νότιον (in Greek) | |
---|---|
மாற்றுப் பெயர் | நோட்டியம் |
இருப்பிடம் | அமெட்பேலி, இஸ்மீர் மாகாணம், துருக்கி |
பகுதி | ஐயோனியா |
ஆயத்தொலைகள் | 37°59′34″N 27°11′51″E / 37.99278°N 27.19750°E |
வகை | குடியேற்றம் |
வரலாறு | |
நிகழ்வுகள் | நோட்டியம் சமர் |
நோஷன் அல்லது நோட்டியம் ( Notion or Notium ) என்பது அனத்தோலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு கிரேக்க நகர அரசாகும். இது நவீன துருக்கியில் உள்ள இசுமீருக்கு தெற்கே சுமார் 50 கிலோமீட்டர்கள் (31 மைல்) தொலைவில், குசாதாசி வளைகுடாவில் உள்ளது. கடல் தெரியும் ஒரு மலை மீது நோட்டியம் அமைந்துள்ளது; இது அருகிலுள்ள கொலோஃபோன் மற்றும் கிளாரோசுக்கு ஒரு துறைமுகமாக செயல்பட்டது. மேலும் யாத்ரீகர்கள் கிளாரோசில் உள்ள அப்பல்லோவின் ஆரக்கிள் செல்லும் வழியில் அடிக்கடி இப்பகுதியைக் கடந்து சென்றனர். இந்த பண்டைய நகரத்தின் மதில் சுவர்கள், நெக்ரோபோலிஸ், கோயில், அகோரா, நடக அரங்கம் ஆகியவற்றின் எச்சங்கள் இன்னும் உள்ளன. நகரத்தின் இடிபாடுகள் இப்போது துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தின் மெண்டெரஸ் மாவட்டத்தில் உள்ள நவீன நகரமான அகமெட்பேலியின் கிழக்கே காணப்படுகின்றன.
நோஷனைக் குறித்த துவக்கக் குறிப்பு எரோடோடசினால் குறிப்பிடபட்டுள்ளது.
கிமு ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாரசீகமானது கொலோஃபோன் மற்றும் நோஷனை வென்றது. ஆனால் அவை கிரேக்க பாரசீகப் போர்களினால் விடுவிக்கப்பட்டன. பின்னர் இவை தனித்தனியாக டெலியன் கூட்டணியில் இணைந்தன (கொலோஃபோன் ஒரு வருடத்திற்கு மூன்று தாலந்துகளை திரையாக செலுத்தியது, சிறிய நகரான நோஷன் ஒரு தாலத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலுத்தியது). [1]
பெலோபொன்னேசியன் போரின் ஒரு கட்டத்தில் ஏதெனியன் தளபதி பேச்ஸ் இங்கு ஏதெனியன் சார்பு பிரிவினரை அதிகாரத்திற்கு கொண்டுவந்தார். "பின்னர் இங்கு ஏதென்சிலிருந்து மக்கள் குடியேற்றப்பட்டனர். மேலும் இந்த இடம் ஏதெனியன் சட்டங்களின்படி குடியேற்றமாக ஆக்கப்பட்டது" (துசிடிடிஸ் III:34). அதன்பிறகு இது ஏதெனியன் தளமாக செயல்பட்டது. கிமு 406 இல் இது நோட்டியம் சமரில் எசுபார்த்தன் வெற்றியின் தளமாகுமாக இருந்தது. கிமு நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது கொலோபோன் [2] உடன் ஒரு சிம்போலிடியாவில் (ஃபெடரல் லீக்) இணைந்தது. மேலும் "ரோமன் காலத்தில் நோஷன் இதன் என்ற பெயர் முற்றிலும் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது." [3]