ஒரு நோய் தொகுதி (Disease cluster) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது காலத்திற்குள் ஒப்பீட்டளவில் அசாதாரணமான மருத்துவ நிலை அல்லது நிகழ்வின் வழக்கத்திற்கு மாறாகப் பெரிய திரட்டல் ஆகும். ஒரு நோய்த் தொகுதியினை அங்கீகரிப்பது நோய் வாய்ப்பின் மூலம் எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமாக நோய்த்தொற்று இருப்பதைப் பொறுத்தது அமைகிறது. சந்தேகத்திற்கிடமான நோய்த் தொகுதியினை அடையாளம் காண்பது ஆரம்பத்தில் நிகழ்வுச் சான்றுகளைப் பொறுத்தது. நோய்பரவலியல் நிபுணர்கள் மற்றும் உயிரி புள்ளியியலாளர்கள் சந்தேகிக்கப்படும் நோய்த் தொகுதி பகுதியில் நோயின் உண்மையான அதிகரிப்புக்கு உள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். பொதுவாக, நோய்த் தொகுதிகள் அங்கீகரிக்கப்படும்போது, அப்பகுதியில் உள்ள பொதுச் சுகாதாரத் துறைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.[1] நோய்த் தொகுதியின் அளவு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால், நோய்த்தாக்கம் குறித்து மறு மதிப்பீடு செய்யவேண்டும்.
இலண்டனின் சோகோவில் 1854ல் காலரா நோய்த்தாக்கம் குறித்து ஜான் இசுனோவின் முன்னோடி விசாரணை இத்தகைய நோய்த் தொகுதி ஆய்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.