நோவ்ரா அல் நோமன்

நோவ்ரா அல் நோமன் ( அரபு மொழி: نورةأحمدالنومان‎ ) ஓர் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அறிவியல் புனைவு கதை எழுத்தாளர்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அல் நோமன் ஐக்கிய அரபு அமீரக பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றார்.சார்ஜாவின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

நாவல்கள்

[தொகு]

இவரது முதல் நாவலான அஜ்வான் 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் 2013 ஆம் ஆண்டில் எடிசலாட் குழந்தைகளுக்கான சிறந்த புத்தகத்திற்கான விருதை பெற்றது.[2] "'தனது மகள் படிக்க அரபி மொழியில் இளம் வயது அறிவியல் புனைவுகதைகள் பார்க்க முடியவில்லை" என்பதால் தான் இந்த நாவலை எழுதியதாக அல் நோமன் கூறினார். மேலும் பதின்வயது புனைவுகதை மற்றும் அறிவியல் புனைவுகதை இரண்டும் அரபியில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அஜ்வான் நாவலின் தொடர்ச்சி மண்டான் என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[3]

படைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]