ப. சு. இராமன்

பட்டாபி சுந்தர இராமன்
பிறப்பு7 நவம்பர் 1960
இந்தியா, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிமூத்த வழக்கறிஞர்
அறியப்படுவதுதமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்

பட்டாபி சுந்தர இராமன் (P. S. Raman)(பிறப்பு: நவம்பர் 7, 1960) என்பவர் ஒரு இந்திய மூத்த வழக்கறிஞரும், தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞரும் ஆவார். இவர் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும் திராவிட முனேற்றக் கழக அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் இளைய மகன் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பட்டாபி சுந்தர இராமன் 1960 நவம்பர் 7 அன்று பிறந்தார். இவரது தந்தை வழக்கறிஞர் வி. பி. ராமன் ஆவார், வி. பி. இராமன் 1977 முதல் 1979 வரை தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். [1] [2] பி. எஸ். இராமனின் அண்ணன் பிரபல நடிகரான மோகன் வி. ராமன் ஆவார்.

சுந்தர இராமன் தனது பள்ளிப்படிப்பை சென்னை வித்யா மந்திரில் முடித்து, சென்னை லயோலா கல்லூரியில் வணிவியலில் பட்டம் பெற்றார். [1] பின்னர் இராமன் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் மயின்று பட்டம் பெற்றார். [2]

தொழில்

[தொகு]

இராமன் 1985 இல் ஒரு வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார் [1] மற்றும் 1991 இல் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு இராமன் அண்ட் அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனத்தை நிறுவினார். [2] இராமன் சென்னை உயர்நீதிமன்றத்திலும், இந்திய உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் பயிற்சியை மேற்கொண்டார். [2] 2004 செப்டம்பரில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியமர்ந்தார். [1] தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர் முத்துசாமி பதவி விலகியதையடுத்து, 2006 சூன் 11 அன்று, ஆர். முத்துக்குமாரசாமிக்கு பதிலாக ராமன் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். [3] தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஜி. மாசிலாமணி பதவி விலகியதையடுத்து, ராமன் 2009 சூலை 29 அன்று தமிழ்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக ஆனார்.

மேற்கோள்கள்

[தொகு]