சுருக்கம் | பதுஅ கிஆப |
---|---|
உருவாக்கம் | 1996 |
நோக்கம் | துடுப்பாட்ட நிர்வாகம் |
தலைமையகம் | |
ஆள்கூறுகள் | 37°49′06″S 144°58′51″E / 37.818328°S 144.9808°E |
மண்டல வளர்ச்சி மேலாளர் | ஆண்ட்ரூ பைச்னி |
தாய் அமைப்பு | பதுஅ |
வலைத்தளம் | [1] |
ப. து. அ கிழக்காசியா - பசிபிக் ( ICC East Asia-Pacific,abbr:ICC EAP) கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதியில் துடுப்பாட்ட விளையாட்டை நிர்வகிக்கும் பொறுப்புள்ள ஓர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மண்டலமாகும்.
1996ஆம் ஆண்டு உருவாக்கபட்ட இந்த மண்டலம் 1999ஆம் ஆண்டு தனது அலுவலகத்தை ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நிறுவியது. இதன் நிர்வாகத்தில் இரு தேர்வுநிலை நாடுகள், நான்கு ப.து.அ துணை அங்கத்துவ நாடுகள் மற்றும் ஆறு ப.து.அ இணை அங்கத்துவ நாடுகள் உள்ளன.[1][2]
மண்டல வளர்ச்சி மேலாளராக ஆண்ட்ரூ பைச்னி மெல்பேர்ண் நகரில் துடுப்பாட்டம் ஆத்திரேலியா நிறுவன கட்டிடத்தில் அமைந்துள்ள மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த மண்டலத்தில் தேர்வுநிலை அங்கத்தினர்களான ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியும் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியும் மண்டலப் பணிகளுக்கு உதவி வருகின்றன. தெற்காசியாவில் ஆடும் நான்கு ஆசியத் தேர்வுத் துடுப்பாட்ட நாடுகளான (வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான் மற்றும் இலங்கை ஆசியத் துடுப்பாட்ட அவையின் அங்கத்தினர்களாக உள்ளனர்..[3][4]
இந்த மண்டல அவை பன்னாட்டுப் போட்டிகள், நிகழ்வுகள், பயிற்றுனர் வகுப்புகள், நடுவர் கல்வி, இளைஞர் வளர்ச்சி/பயிற்சி, பள்ளிகளில் துடுப்பாட்ட வளர்ச்சி, நிர்வாக மேம்பாடு, சந்தைப்படுத்துதல் போன்றவற்றை கண்காணித்து வருகிறது.[3]
மேலும் உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகளின் கிழக்காசியா பசிபிக் மண்டலப் போட்டிகளை இந்த அவை மேலாண்மை செய்கிறது. இந்த மண்டலத்திலுள்ள நாடுகள் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 போட்டிகளுக்கு தகுதிபெறும் வாய்ப்பினைப் பெறவும் தேர்வுநிலை அடையவும் இந்த சங்கப்போட்டிகள் உதவுகின்றன. [3]
தேர்வுத் துடுப்பாட்ட அங்கத்தினர்கள்
துணை உறுப்பினர்கள்
இணை உறுப்பினர்கள்
தேர்வுநிலை அங்கத்தினரும் நிறுவனங்களும்
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)