தனித் தகவல்கள் | |
---|---|
முழுப் பெயர் | பகதூர் பிரசாத்து |
தேசியம் | இந்தியர் |
பிறந்த நாள் | 1 செப்டம்பர் 1965 |
பிறந்த இடம் | பில்லாவுவா, சித்வால், மவூ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
உயரம் | 1.77 m (5 அடி 9+1⁄2 அங்)[1] |
எடை | 72 கிலோ கிராம் |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | 1500 மீட்டர், 3000 மீட்டர், 5000 மீட்டர் |
சங்கம் | இந்திய இரயில்வே |
சாதனைகளும் பட்டங்களும் | |
தன்னுடைய சிறப்பானவை | 1500 m: 3:38.00 (1995) 5000 m: 13:29.70 (1992) |
பகதூர் பிரசாத் சிங் (Bahadur Prasad Singh) ஒரு முன்னாள் இந்திய நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர் ஆவார். 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். 5000 மீட்டர் ஓட்டத்தில் தற்போதைய தேசிய சாதனையை இவர் வைத்துள்ளார். சிங் 1992 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று இங்கிலாந்தின் பர்மிங்காமில் 5000 மீ ஓட்டப்போட்டியில் சாதனையை (13:29.70) படைத்தார். பின்னர் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று 1995 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பிரசாத் 3:38.00 நிமிடத்தில் 1500 மீ தேசிய சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனை 23 ஆண்டுகளாக இவரிடம் இருந்தது. [2] [3]
பிரசாத் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்சிலோனா ஒலிம்பிக்கில் 5000 மீ போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு இவர் பந்தய தூரத்தை 13:50.71 நேரத்தில் கடந்தார். 1996 ஆம் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் 1500 மீ ஓட்டத்திலும் பங்கேற்றார். அவர் ஐந்தாவது பிரிவில் முதல் சுற்றில் 3:46.16 என்ற முயற்சியுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தார். [4] நடுத்தர தூர ஓட்டத்தில் இவர் செய்த சாதனைகளுக்காக 1992 ஆம் ஆண்டிற்கான அர்ச்சுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது. [5]