பகத்சிங் கோசியாரி | |
---|---|
भगत सिंह कोश्यारी | |
![]() கலந்துரையாடலில் பகத்சிங் கோசியார் | |
22வது மகாராட்டிர ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 05 செப்டம்பர் 2019 | |
முன்னையவர் | சி. வித்தியாசாகர் ராவ் |
இரண்டாவது முதலமைச்சர், உத்தரகண்ட் | |
பதவியில் 30 அக்டோபர் 2001 – 1 மார்ச் 2002 | |
முன்னையவர் | நித்தியானந்த சுவாமி |
பின்னவர் | என். டி. திவாரி |
மக்களவை உறுப்பினர் நைனிடால்-உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 16 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | கரண் சந்த் சிங் பாபா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 சூன் 1942 பாலனதுரா சேத்தப்கர், பாகேஸ்வர் மாவட்டம், உத்தராகண்ட் இந்தியா ![]() |
இறப்பு | 17 சூன் 1942 |
இளைப்பாறுமிடம் | 17 சூன் 1942 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | திருமணமாதவர் |
பிள்ளைகள் | none |
பெற்றோர் |
|
முன்னாள் மாணவர் | ஆக்ரா பல்கலைக்கழகம் |
பணி | ஆசிரியர் |
சமயம் | இந்து சமயம் |
பகத்சிங் கோசியாரி (Bhagat Singh Koshyari) (இந்தி: भगत सिंह कोश्यारी) (பிறப்பு: 17 சூன் 1942) இந்திய அரசியல்வாதியும், உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரும் ஆவார். இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினரான பகத் சிங் கோசியாரி, பாரதிய ஜனதா கட்சியி தேசியத் துணைத் தலைவராகவும், உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர்.
மேலும் உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக 2001 முதல் 2002 முடியவும், பின்னர் 2002 முதல் 2007 முடியவும் பதவியில் இருந்தவர். 2008 முதல் 2014 முடிய இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 16 மே 2014-இல் பதினாறாவது மக்களவைக்கு, நைனிடால்-உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கோபால் சிங் கோசியாரி – மோதிமா தேவி இணையருக்கு 17 சூன் 1942-இல் பாலனதுரா சேத்தப்கர், பாகேஸ்வர் மாவட்டம், உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்தவர் பகத் சிங் கோசியாரி.[1]
அல்மோரா கல்லூரியில் ஆங்கில மொழி முதுநிலை பட்டம் பெற்ற பகத் சிங் கோசியாரி, கல்லூரி ஆசிரியராகவும், ஊடகவியல் துறையிலும் பணியாற்றியவர்.
இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை காலத்தில், மிசா சட்டத்தில் பகத் சிங் கோசியாரி கைது செய்யப்பட்டு அல்மோரா மற்றும் பதேகர் சிறைகளில் சூலை 1975 முதல் மார்ச் 1977 முடிய சிறையில் இருந்தவர்.[1]
மே 1977-இல் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2000-இல் புதிதாக நிறுவப்பட்ட உத்தராஞ்சல் மாநிலத்தின் எரிசக்தி, நீர்பாசானம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
நித்தியானந்த சுவாமிக்குப் பின்னர், 30 நவம்பர் 2001 முதல் 1 மார்ச் 2002 முடிய உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக 30 நவம்பர் 2001 முதல் 1 மார்ச் 2002 முடிய பணியாற்றியவர்.[2]