பகவான்தாசு படேல் (Bhagwandas Patel) (பிறப்பு :19 நவம்பர் 1943) இந்தியாவின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புறவியலாளர் ஆவார்.[1] குசராத்து பழங்குடியின இலக்கிய ஆய்வுகளின் முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். வாய்மொழி இலக்கியங்களை இலக்கியவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததில் பகவான்தாசு படேல் முதன்மையானவர்.[2] 1995 ஆம் ஆண்டு பிலி என்னும் பழங்குடியின மக்களின் இராமயணக் கதையின் முதற்பதிப்பான பிலி லோகாக்யான்: ரோம் சித்மா நி வரததே எனும் நூலைத் தொகுத்தளித்தார்.[3]