பகுரைனில் கல்வி

பகுரைனில் கல்வி (Education in Bahrain) முறையானது அராபியத் தீபகற்பத்தில் இருந்த பொதுக்கல்வி முறையாக இருந்தது. நாட்டில் அதுவரையில் இருந்த சிறுவர்களுக்கான இரண்டு பொதுப்பள்ளிகளை நடத்துவதற்கு பகுரைன் அரசாங்கம் 1930 இல் பொறுப்பேற்றுக் கொண்டபோது இக்கல்வித் திட்டம் நிறுவப்பட்டது. பின்னதாக 20 ஆம் நூற்றாண்டில் சிறுமிகளுக்கான தனிப்பள்ளிகளும், பல்வேறு பல்கலைக் கழகங்களும் நாட்டில் நிறுவப்பட்டன. 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி பகுரைனின் படிப்பறிவு வீதம் 94.6% ஆகும். 2008 ஆம் ஆண்டின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்[1] 2.9 சதவீதம் கல்விக்காகச் செலவிடப்பட்டுள்ளது.

கல்வி வரலாறு

[தொகு]
அல்-இதயா அல்-காலிபியா ஆண்கள் பள்ளி

20 ஆம் நூற்றாண்டுக்கு முன் குரானியப் பள்ளிகள் மட்டுமே பகுரைனின் கல்வி வளர்ச்சிக்கு மூலாதாரமாகத் திகழ்ந்தன. இப்பள்ளிகள் குறிப்பாக குர் ஆனைப் படிப்பது மட்டுமே முதன்மையான இலக்காகக் கொண்டு இயங்கின[2]. நாட்டில் முதலாவது நவீனப்பள்ளி 1892 ஆம் ஆண்டு மனாமாவில் அமெரிக்க டச்சு சீர்திருத்த மாதா கோவிலால் தொடங்கப்பட்டது. இப்பள்ளியின் பாடத்திட்டம் ஆங்கிலம், கணக்கு மற்றும் கிறித்தவம் தொடர்பான கல்வி முதலியனவற்றை உள்ளடக்கியிருந்தது. நாட்டிலிருந்த முன்னணி வியாபாரிகள் பலரும் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளிகளுக்கு அனுப்பினர். நிதிச்சுமை காரணமாக 1933 ஆம் ஆண்டு இப்பள்ளிகூடம் மூடப்பட்டது.[3] சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப்பள்ளி அல் ராசா பள்ளி என்ற பெயரில் மீண்டும் திறக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

வசதிபடைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்பதற்காக பம்பாய் அல்லது பாக்தாத் நகரங்களுக்கு அனுப்பி வைத்தனர். சமய மேலாதிக்கம் நிறைந்த பின்னணியில் இருந்த பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை அப்பகுதியில் இருந்த மதச்சார்பு பள்ளிகளுக்கு அனுப்பினர். மெக்காவில் உள்ள மதராசா மற்றும் அராபியாவில் உள்ள அல்-ஆசா போன்ற பள்ளிகள் சன்னி இசுலாம் மாணவர்களுக்கும் மற்றும் நயாப் மற்றும் கார்பாலா பள்ளிகள் சியா இசுலாம் மாணவர்களுக்கும் மதச்சார்பு பள்ளிகளாக இருந்தன. பாரம்பரியமான இந்த மதக்கல்வியின் விளைவாக அமெரிக்க டச்சு சீர்திருத்த பள்ளியின் மீது ஒரு எதிர்மறை இழுக்கு சுமத்தப்பட்டது. துணிச்சல் மிகுந்த சில பெற்றோர்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.[4] நாட்டில் பொதுப்பள்ளிகள் துவக்கப்படுவதற்கு முன்புவரை சியா இசுலாமிய மாணவர்களும் சன்னி இசுலாமிய மாணவர்களும் தங்கள் கல்விச் செயல்முறைகளில் சிறிய அளவிற்கான இடைவினையே புரிந்தனர். இதனால் வெவ்வேறு வகையான கற்றல் சூழல்கள் தோன்றின. சியா மாணவர்கள் மடங்களில் இருந்தும் சன்னி மாணவர்கள் மசூதிகளில் இருந்தும் தங்களுக்கான அறிவைப் பெற்றனர், இருந்தாலும் மடமோ மசூதியோ அலுவலக ரீதியாக அவைகளுக்கான முறையான கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கவில்லை.[5]

மனாமாவில் இருந்த யபாரியா பள்ளி ,1931

முதல் உலகப்போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து மேற் கத்திய சிந்தனைகள் நாடு முழுவதும் பரவின. இதன் உச்சமாக பகுரைனில் முதலாவது பொதுப்பள்ளி அல்-இதயா அல் காலிபியா ஆண்கள் பள்ளி 1919[2] இல் முகாரக்கில் தொடங்கப்பட்டது. முகாரக் நகரின் முக்கிய குடிமக்கள் பலர் சேர்ந்து இப்பள்ளியைத் தொடங்கினர். பகுரைனின் அரசகுடும்பத்தினர் இப்பள்ளிக்கான ஒப்புதலை வழங்கினர். பகுரைனின் முன்னணி வியாபாரிகள் பலர் இணைந்து நாட்டின் முதலாவது கல்விக் குழுவை நிறுவினர். பகுரைனை ஆட்சிபுரிந்தவரும் சட்டப்படியான கல்வித்துறை அமைச்சருமான இசா இபின் அலி அல் காலிபியாவின் மகனான சேக் அப்துல்லா பின் இசா அல்- காலிபியா இக்கல்விக் குழுவிற்கு தலைமை வகித்தார். அல் இதயா ஆணகள் பள்ளியை நிர்வகிக்கவும் இக்கல்விக்குழுவிற்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இப்பள்ளி சேக் அப்துல்லாவின் ஆலோசனையில் பேரில் உருவானது என்பதுதான் உண்மை. இங்கிலாந்தில் [6] நடைபெற்ற முதலாம் உலக்ப்போர் முடிவு கொண்டாட்டங்களில் இருந்து நாடு திரும்பியவுடன் இவர் இப்பள்ளிக்கான ஆலோசனையை முன்வைத்திருந்தார்.

1926 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான இரண்டாவது பொதுப்பள்ளி தலைநகரமான மனாமாவில் தொடங்கப்பட்டது. இதற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1928 இல் பெண்களுக்கான முதலாவது பொதுப்பள்ளி நிறுவப்பட்டது. கல்விக்குழு நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பகுரைன் அரசாங்கம் இப்பள்ளிகளை 1930 ஆம் ஆண்டில் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bahrain". CIA - The World Factbook. Archived from the original on 29 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 "History". Ministry of Education - Bahrain. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.
  3. Shirawi 1987, ப. 59.
  4. Shirawi 1987, ப. 60.
  5. Shirawi 1987, ப. 60-61.
  6. Shirawi 1987, ப. 61.

புற இணைப்புகள்

[தொகு]