பக்தி சர்மா Bhakti Sharma | |
---|---|
பிறப்பு | நவம்பர் 30, 1989 மும்பை |
தேசியம் | இந்தியர் |
பணி | நீச்சல் வீராங்கனை |
செயற்பாட்டுக் காலம் | 2003-இன்று |
விருதுகள் | டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருது, 2010 |
வலைத்தளம் | |
bhaktisharma.in |
பக்தி சர்மா (Bhakti Sharma, பிறப்பு: நவம்பர் 30, 1989) இந்திய திறந்த-வெளி நீச்சல் வீராங்கனை ஆவார். அண்டார்டிக் பெருங்கடலில் மிக அதிக தூரத்தை மிக விரைவாக கடந்து உலக சாதனை படைத்தவராவார்.
பக்தி சர்மா பம்பாயில் பிறந்து, இராஜஸ்தான், உதய்ப்பூரில் வளர்ந்தவர். இவரின் தாயார் ஒரு தேசிய நீச்சல் வீராங்கனை ஆவார். பக்தி சர்மா தனது இரண்டரை வயதில் இருந்து நீச்சல் பயின்றார். சிம்பியோசிசு பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.
அண்டார்டிக் பெருங்கடலில் 1.4 மைல் தூரத்தினை 52 நிமிடங்களில் ஒரு டிகிரி வெப்பத்தில் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை நிகழ்த்திய இளம் வயது நபர் மற்றும் முதல் ஆசியர் என்ற இரு சாதனைகளையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.[1] பக்தி சர்மா உலகின் ஐந்து பெருங்கடல்கள், மற்றும் வேறு எட்டு கடல்களிலும் நீந்தியுள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதினை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றார்.[2]