பக்ரி (P145) மலேசிய மக்களவை தொகுதி ![]() | |
---|---|
Bakri (P145) Federal Constituency in Johor | |
![]() பக்ரி மக்களவைத் தொகுதி (P145 Bakri) | |
மாவட்டம் | மூவார் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 97,335 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பக்ரி தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெந்தாயான், சிம்பாங் ஜெராம், புக்கிட் நானிங் |
பரப்பளவு | 191 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | தான் கோங் பின் (Tan Hong Pin) |
மக்கள் தொகை | 135,179 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பக்ரி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bakri; ஆங்கிலம்: Bakri Federal Constituency; சீனம்: 峇吉里国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் மூவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P145) ஆகும்.[5]
பக்ரி மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து பக்ரி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
மூவார் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு மூவார் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. மூவார் மாவட்டம் முன்பு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. மூவார் அல்லது பண்டார் மகாராணி என்பது மற்றொரு பிரிவு. லேடாங் எனும் தங்காக் என்பது மற்றொரு பிரிவு.
மூவார் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 150 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 143 கி.மீ.; மலாக்கா மாநகரில் இருந்து 47 கி.மீ.; சிங்கப்பூரில் இருந்து 179 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
மலாக்கா நீரிணையின் கரையோரத்தில்; மூவார் ஆற்றின் முகப்பில் மூவார் நகரம் அமைந்து உள்ளது. மூவார் மாவட்டம், சிங்கப்பூரைப் போல இரண்டரை மடங்கு பெரிய நிலப்பகுதியைக் கொண்டது.
பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பக்ரி தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P122 | 1986–1990 | சுவா ஜுய் மெங் (Chua Jui Meng) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P132 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P145 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | எர் தெக் குவா (Er Teck Hwa) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | இயோ பி இன் (Yeo Bee Yin) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | தான் கோங் பின் (Tan Hong Pin) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
தான் கோங் பின் (Tan Hong Pin) | பாக்காத்தான் அரப்பான் | 36,636 | 50.09 | 12.59 ▼ | |
லீ சின் யோங் (Lee Ching Yong) | பாரிசான் நேசனல் | 17,382 | 23.77 | 1.32 ▼ | |
செல்வராஜன் சுப்பையா (Chelvarajan Suppiah) | பெரிக்காத்தான் நேசனல் | 17,222 | 23.55 | 23.55 ![]() | |
அரோன் ஜபார் (Haron Jaffar) | சுயேச்சை | 1,900 | 2.60 | 2.60 ![]() | |
மொத்தம் | 73,140 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 73,140 | 98.68 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 981 | 1.32 | |||
மொத்த வாக்குகள் | 74,121 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 97,335 | 75.14 | 9.63 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)