பசவராஜ் பொம்மை

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை
23வது கர்நாடகாவின் முதலமைச்சர்
பதவியில்
28 சூலை 2021
ஆளுநர்தவார் சந்த் கெலாட்
Succeedingபி. எஸ். எடியூரப்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சனவரி 1960 (1960-01-28) (அகவை 64)
ஹூப்ளி, தார்வாட், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம்
துணைவர்சென்னம்மா
பெற்றோர்எஸ். ஆர். பொம்மை
கங்கம்மா
வாழிடம்பெங்களூர்
கல்விபி.இ
இணையத்தளம்www.bsbommai.com

பசவராஜ் பொம்மை (Basavaraj Bommai, பிறப்பு: சனவரி 28, 1960 ) என்பவர் கர்நாடகத்தை சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதீய ஜனதா கட்சியின் கர்நாடகா அரசின் உள்துறை அமைச்சராக இருந்தவர். எடியூரப்பாவின் பதவி விலகலுக்குப் பின் 28 சூலை 2021 அன்று கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[1] [2] இவர் முன்னாள் கர்நாடகா மாநில முதலமைச்சர் எஸ். ஆா். பொம்மையின் மகன் ஆவார். இவா் மெக்கானிக்கல் இன்ஜினியரில் பட்டதாரி ஆவாா். இவர் தனது அரசியல் வாழ்க்கையை ஜனதா தளத்துடன் தொடங்கினார். இவர் கர்நாடகா சட்டமன்ற கவுன்சிலின், உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருமுறை (1998 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில்) தார்வாட் உள்ளூர் அதிகாரிகளின் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஜனதா தளத்தை (ஐக்கிய) விட்டுவிட்டு, பாரதீய ஜனதா கட்சியில் 2008 பிப்ரவரியில் சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத் தேர்தலில், அவர் ஹவேரி மாவட்டத்தில் ஷிகாகான் தொகுதியில் இருந்து கர்நாடகா சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]