பசிபிக் இரத்த கடல் விண்மீன் பொதுவாகப் பிரகாசமான ஆரஞ்சு-சிவப்பு நிறத்தால் அடையாளம் காணப்படலாம். ஆனால் பழுப்பு நிறத்திலிருந்து கிட்டத்தட்ட ஊதா வரை பல வேறுபாடுகள் காணப்படலாம். வட்டு சாம்பல் நிறமாக இருக்கலாம். கதிர்களுக்கு இடையில் இளஞ்சிவப்பு புள்ளிகளின் சேணம் போன்ற குறிகளும் இருக்கலாம்.[1] இவை பொதுவாக 5 ஆரங்களைக் கொண்டிருக்கின்றன (எப்போதாவது 4-6). ஆரங்கள் மென்மையாகவும், நுண் இடுக்கி மற்றும் முதுகெலும்புகள் இல்லாததால் மென்மையாகவும் தோன்றும். இச்சிற்றினம் ஒப்பீட்டளவில் சிறியது. இதனுடைய விட்டம் பொதுவாக 8 செ.மீ. க்கு மேல் இருக்கும். அரிதாக 12 செ.மீ. ஐ விட பெரியதும் உள்ளன.[2] அனைத்து கடல் நட்சத்திரங்களையும் போலவே, இரத்த நட்சத்திரமும் ஒரு கற்சல்லடைத் தட்டினைக் கொண்டுள்ளது. இதைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.
பசிபிக் இரத்த கடல் விண்மீனில் ஆண் பெண் எனப் பாலினங்கள் தனித்தனியாகக் காணப்படும். பெண்களுக்கு அடைகாக்கத் தெரியாது.[3] இந்த அறிக்கை மற்ற ஆதாரங்களுடன் முரண்படுகிறது. இளம் வயது பெண் கடல் நட்சத்திரம் அடைகாக்கும் மற்றும் பெரிய கடல் நட்சத்திரம் நேரடியாகத் தண்ணீரில் முட்டைகளை வெளியேற்றும். இவற்றை அடைகாப்பதில்லை.[4] இதன் காரணமாக இச்சிற்றினம் ஒரு சிக்கலானது என்று உயிரியலாளர்கள் நம்புகின்றனர்.[5]கரு நிலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் தனித்தனியாக மிதக்கின்றன. குஞ்சு பொரித்த இளம் உயிரிகள் குற்றிலையுடையன. இதனால் இவை நீந்துகின்றன. முட்டையிடப்பட்ட முட்டைகள் 1342 மைக்ரோ மீட்டர் விட்டமுடையது.[6]
பசிபிக் இரத்த கடல் விண்மீன் என்ரிசியா லெவியசுகுலா தன்னை நிலைநிறுத்தும் நடத்தையை ஒப்பிடும் ஆய்வில், கரங்கள் 1 மற்றும் 3ஐ ஒன்றையொன்று நோக்கி முறுக்கி, தொட்டியின் அடிப்பகுதியில் தன்னைத் தாங்கிக் கொள்ள 4 மற்றும் 5 கைகளைப் பயன்படுத்துகின்றன. மேலும் இது உட்கார்ந்து இருப்பது போன்ற நிலையில் காணப்படும். தன்னைத்தானே புரட்டிக்கொள்ளும். இந்நிகழ்வு ஒட்டுமொத்தமாக, 15.22 நிமிடங்கள் சராசரி நேரத்தைக் கொண்டுள்ளது.[7]
பசிபிக் இரத்த கடல் விண்மீனின் வாழ்விடமானது பாறைகளுக்கு அடியில் உள்ள அலைக்கற்றை மண்டலம் மற்றும் குறைந்த அலைக் கோட்டிலிருந்து சுமார் 400 மீட்டர் ஆழம் வரை பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஆகும்.[9] இவை பெரும்பாலும் ஆர்க்டோனோ விட்டட்டா என்ற புழுவுடன் இணைவாழ்வினை கொண்டுள்ளன.[10]
என்ரிசியா லெவியுசுகுலா முக்கியமான கலப்பினங்கள் மற்றும் சாத்தியமான தனித்துவமான சிற்றினமாக இருக்கலாம்.[11]என்றிசியா லெவியசுகுலா அனெக்டென்சு மற்றும் என்றிசியா லெவியசுகுலா லெவிவசுகுலா ஆகியவை துணையினங்கள் உள்ளன.[12]
பசிபிக் இரத்த கடல் விண்மீன் முக்கியமாகக் கடற்பாசிகள் மற்றும் சிறிய பாக்டீரியாக்களை உணவாக உட்கொள்கிறது.[13] கடல் நட்சத்திரம் இந்த சிறிய துகள்களைக் கோழைப் படலத்தால் பிடிக்கப்பட்டு குற்றிலையுடைய உணவுப் பாதையில் குற்றிலை அசைவுகளால் கடத்தப்படுகிறது. இது கடற்பாசிகள் மற்றும் பிரயோசோவாவின் மேற்பரப்பில் வயிற்றைப் பயன்படுத்தி உணவூட்டுகிறது.[14]