மொகெஞ்சதாரோ தொல்லியல் களத்தின் தெற்குப் பகுதியின் தொகுதி எண் 1ல், 1928 - 1929ல் அகழ்வாய்வு செய்த போது கண்டெடுத்த 420 தொல்பொருட்களில், கிமு 2350 - 2000க்கும் இடைப்பட்ட காலத்திய பசுபதி முத்திரையும் ஒன்றாகும்.
இவர் பசுபதி முத்திரையை பகுப்பாய்வு செய்து, அதில் உள்ள யோக நிலையில் அமர்ந்த உருவம் வேதகாலத்திற்கு முந்தைய பண்டைய இந்திய மக்கள் வணங்கிப் போற்றிய, தற்கால சிவபெருமானின் முந்தையத் தோற்றமான உருத்திரன் என்று பகுப்பாய்வு செய்துள்ளார். [5]
பசுபதி முத்திரை சிவனை குறிக்கும் என்பதற்கான எனது நான்கு காரணங்கள். இம்முத்திரையில் ஐந்து முகங்கொண்ட சிவனின் மூன்று முகங்கள் வெளிப்படையாகத் தெரிகிறது.. இரண்டாவதாக தலையில் காளையின் கொம்புகள் மற்றும் சிவனுக்குரிய சிறப்புச் சின்னமான திரிசூலமும் உள்ளது. மூன்றாவதாக இம்முத்திரையில் அமர்ந்த நிலையில் உள்ள தோற்றம் ஒரு குறிப்பிட்ட யோக நிலையில் அமர்ந்திருக்கும் மகாயோகியான சிவனை நினைவுப்படுத்துகிறது. நான்காவதாக யோகியைச் சுற்றிலும் உள்ள விலங்குகள், பசுபதி எனும் சீவராசிகளின் தலைவரான சிவபெருமானை நினைவுப்படுத்துகிறது.[6]
பின்னர், 1931 ஆம் ஆண்டில் ஜான் மார்சல், பசுபதி முத்திரை சீவராசிகளின் படைப்பிற்கு மூலகாரணமாக உருவகப்படுத்தும் இலிங்கத்துடன் தொடர்புடையது என்பதை தெளிவுபடுத்தினார்.
பசுபதி முத்திரை குறித்து பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றது.[7] அறிஞர்களிடையே, ஜான் மார்ஷலின் பசுபதி முத்திரை குறித்த பகுப்பாய்விற்கு ஆதரவுகளும், விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது. [8] டோரிஸ் மெத் சிறீனிவாசன் என்பவர்[9], ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர் ஜான் மார்ஷலின் பசுபதி முத்திரைக் குறித்த கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளார்.[10][11]மேலும் ஹெர்பர்ட் சுல்லிவான் மற்றும் ஆல்ப் ஹில்டெபிடெல் ஆகியோர் ஜான் மார்ஷலில் கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளனர்.[12][13]
இருப்பினும், காளையை வாகனமாகக் கொண்ட ஆதிசிவனைக் குறிக்கும் முத்திரையே பசுபதி முத்திரை என முடிந்த முடிபாக அறிஞர்கள் ஏற்றுள்ளனர்.[14] இந்த பசுபதி முத்திரையை வேதகால தேவதைகளும், முனிவர்களுமான உருத்திரன், அக்கினி, மகிசாசூரன், கலைக்கோட்டு முனிவர் மற்றும் யோகிகளுடன் தொடர்புறுத்தி நோக்கப்படுகிறது. மேலும் ஆரியர் அல்லாத தெய்வங்களுடனும் தொடர்புறுத்தப்படுகிறது.[7]
2002 ஆம் ஆண்டில் கிரிகோரி எல். போஸ்சல் எனும் தொல்லியல் அறிஞர் பசுபதி முத்திரையை மூக்கொம்பு விலங்குடன் இணைத்துப் பேசுகிறார். மேலும் இம்முத்திரையின் தோற்றம் ஒரு சமயச்சடங்கு ஒன்றின் போது காணப்படுவது என்றும் கருதுகிறார். [15]
↑See e. g. James G. Lochtefeld, The Illustrated Encyclopedia of Hinduism, vol. 2: N–Z. The Rosen Publishing Group, New York 2002, p. 633, who doubts the connection of the seal to Shiva, given the supposedly late age of the god.