பச்சைப் பச்சோந்தி | |
---|---|
![]() | |
ஆண் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
|
Suborder: | இகுவானோமோர்பா
|
குடும்பம்: | பச்சோந்தி
|
பேரினம்: | பர்சிபர்
|
இனம்: | F. viridis
|
இருசொற் பெயரீடு | |
Furcifer viridis புளோரியோ மற்றும் பலர், 2012 | |
![]() |
பச்சைப் பச்சோந்தி (Furcifer viridis)(பர்சிபர் விரிடிசு), மேற்கு மற்றும் வடக்கு மடகாசுகரில் உள்ள காடுகள், புதர்கள் மற்றும் புல்வெளிகளில் பரவலாகக் காணப்படும் பச்சோந்தி சிற்றினமாகும்.[1] பெண் பச்சோந்தி 19 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. பொதுவாக இது இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் மச்சம் அல்லது பட்டையுடன் கூடியது. , ஆண் பச்சோந்தி 28 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. பெரும்பாலும் இது பச்சை நிறத்தில் காணப்படும். பொதுவாக இவற்றின் வாயில் வெளிறிய விளிம்புகள் மற்றும் இவற்றின் உடலின் நடுவில் காணப்படும் வெளிறிய கிடைமட்ட பட்டைகளுடன் காணப்படும். இது முன்பு ப. லேட்டரலிசின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது, ஆனால் 2012-ல் ஒரு தனி சிற்றினமாக அங்கீகரிக்கப்பட்டது.[2][3]
இவற்றின் காலின் ஒரு பக்கத்தில் மூன்று கால்விரல்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கின்றன, மறுபுறம், இரண்டு ஒன்றாக ஒட்டிக்கொண்ட கால்விரல்கள் காணப்படுகின்றன. நீண்ட ஒட்டும் நாக்குடன் உணவைப் பிடிக்க இவை உருமறைப்பை நம்பியுள்ளன. பர்சிபர் பேரினத்தைச் சேர்ந்த மற்ற பச்சோந்திகளைப் போலவே இவற்றின் வால் சுழல் போலச் சுருண்டு மரக்கிளைகளில் தொங்கப் பயன்படுகிறது.[4]