பச்சைப் பறவை மலர்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Crotalaria|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பச்சைப் பறவை மலர்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Crotalaria
இனம்:
இருசொற் பெயரீடு
Crotalaria cunninghamii
R.Br., 1849
பச்சைப் பறவை மலர் செடியில் கொத்துக்களில் தனித்துவமான பச்சை நிற மலர்களைக் கொண்டுள்ளது.

பச்சைப் பறவை மலர், பறவைப் பூ, ரீகல் பறவை மலர் (Crotalaria cunninghamii, also known as green birdflower, birdflower ratulpo, parrot pea or regal birdflower) என்பது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். [1] இதன் தாவரவியல் பெயரின் முதல் பகுதியில் உள்ள Crotalaria என்ற சொல் rattle என்ற கிரேக்க வார்த்தையினால் இடப்பட்டது. ஏனெனில் இவற்றின் விதைகள் சலசலக்கும். தாவரவியல் பெயரின் அடுத்த பகுதியான cunninghamii என்பது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தாவரவியலாளர் ஆலன் கன்னிங்ஹாம் நினைவாக இடப்பட்டது. [1] [2] இந்த தாவரமானது நியாங்குமார்தா வார்ரான் பழங்குடியினரால் மங்கர் என்று அழைக்கப்படுகின்றது. [3]

பச்சைப் பறவை மலரானது ஆத்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பல்லாண்டு தாவரமாகும். இதன் வாழ்விடம் மேற்கு ஆத்திரேலியா, வடக்குப் பகுதியின் பாலைவனங்கள், கடற்கரைப் பகுதிகள், வடிகால்கள், மணல் திட்டுகள் போன்றவை ஆகும். இந்த வாழ்விடமானது நன்கு வடிகாலுடைய மண்ணாகவும், வறண்ட முதல் மித வெப்ப பகுதிகளாகவும் உள்ளது. [4] இவை சனவரி முதல் ஏப்ரல் வரை பூக்கும். பூக்களானது பெரிய தேனீக்கள் மற்றும் தேன் குடிக்கும் பறவைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகிறது. [5]

கண்டுபிடிப்பு

[தொகு]

1810 களில் வடமேற்கு ஆத்திரேலியாவில் கடற்படை பயணத்தின் போது ஆலன் கன்னிங்காம் என்பவரால் பச்சை பறவை மலர் அடையாளம் காணப்பட்டது. 1817 ஆம் ஆண்டில் வடமேற்கு ஆத்திரேலியாவில் மேற்கோண்ட ஏழு மாத பயணத்தின் போது, கன்னிங்காம் 300 க்கும் மேற்பட்ட வெவ்வேறு தாவர இனங்களை சேகரித்தார், அவற்றில் ஒன்று பச்சைப் பறவை மலர் ஆகும். ஆலன் கன்னிங்காம் 1816 இல் பரமட்டா கடற்கரையில் அவர் தரையிறங்கினார் மேலும் ஆத்திரேலியாவில் உள்ள தாவர இனங்களை விரைவாக ஆராய்ந்து அடையாளம் காணத் தொடங்கினார். 1817 இல் ப்ளூ மலைகளுக்கு மேற்கே நடந்த ஒரு பயணத்தின் போது கடுமையான காய்ச்சலில் இருந்து மீண்ட பிறகு, கன்னிங்காம் வட மேற்கு ஆத்திரேலியாவிற்கு கடற்படை பயணத்தில் வந்து இணையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். கன்னிங்காம் அடுத்த ஆண்டுகளில் மேலும் இரண்டு கடற்படை பயணங்களை மேற்கொண்டார். கப்பலில் கடுமையான கசிவு ஏற்பட்டதன் காரணமாக அவரது மூன்றாவது பயணம் கிட்டத்தட்ட தடைபட்டது. அவர்களின் கப்பல் பின்னர் கேரீனிங் விரிகுடாவில் விரைவாக சரி செய்யப்பட்டது. மேலும் கன்னிங்காம் இங்கிலாந்துக்குத் திரும்பும் வரை ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான தாவரங்களைக் கண்டறந்தார். [6]

விளக்கம்

[தொகு]

பச்சை பறவை மலர் தாவரமானது ஒரு பல்லாண்டுத் தாவரப் புதர் ஆகும். இது சுமார் 1-3 மீ உயரம் வரை வளரும். இதன் கிளைகள் மங்கிய பச்சை நிறத்துடனும், நுண் மயிர்களுடனும் காணப்படும். இதன் இலைகள் நீள்வட்டமாக சுமார் 30 மிமீ நீளம் கொண்டவை. இதன் பூக்கள் பெரியதாகவும் பச்சை கலந்த பட்டாணி நிறத்திலும், அதில் மெல்லிய கருப்பு கோடுகளுடன் இருக்கும். இதன் விதை காய்கள் 50 மிமீ நீளம் வரை இருக்கும்.. இந்த தாவரத்தின் கிளை முனைகளின் நீண்ட கூர்முனைகளில் பூக்கள் வரும். மையத் தண்டுடன் அலகு ஒட்டி உள்ள ஒரு பறவையை மிகவும் ஒத்ததாக இதன் பூக்கள் காணப்படும். [1] இந்த மலர்கள் பகுதியளவு நுண் மயிர்களைக் கொண்ட மடல்களால் மூடப்பட்டிருக்கும். பச்சை பறவை மலர் ஒவ்வாமையை உண்டாக்காதது. மேலும் அதன் காய்கள் பெரியதாகவும் கிட்டத்தட்ட சதுரமாகவும் இருக்கும் மற்றும் மென்மையான, பச்சை நிற நுண் மயிர்களைக் கொண்ட ஓட்டினால் மூடப்பட்டிருக்கும். [3]

பச்சைப் பறவை பூக்களின் தோற்றம் இயற்கைத் தேர்வினால் பறவையை ஒத்திருக்கிறதா அல்லது அது தற்செயலானதா என்று விவாதம் எழுந்தது. பூக்கள் தேவையற்ற வேட்டையாடிகளைத் தடுக்க அல்லது பேட்ஃசின் போலியொப்புரு எனப்படும் சில மகரந்தச் சேர்க்கைகளை சேர்க்கைகளை ஈர்ப்பதற்காக பறவையின் வடிவத்தில் உள்ளதா அல்லது அவை தற்செயலாக பறவைகள் போல தோற்றமளிக்கின்றனவா என்ற பரேடோலியா (ஒருவர் தான் காணும் எந்தவொரு புதிய விசயத்தையும் தனக்குத் தெரிந்த விசயங்களைக் கொண்டே விளக்க முயற்சி செய்தல்) என்று அழைக்கப்படுகிறது. குரங்கு போல தோற்றமளிக்கும் குரங்குப் பூ அல்லது அந்துப்பூச்சி போல தோற்றமளிக்கும் ஃபாலெனோப்சிஸ் (மோத் ஆர்க்கிட்) போன்று விலங்குகளைப் போல தோற்றமளிக்கும் மலர்களைக் கொண்ட ஏராளமான தாவரங்கள் உள்ளன. [7] இந்த தாவரங்கள் அவற்றின் தனித்துவமான தோற்றத்தினால் இதேபோன்ற விவதத்திற்கு ஆளாகின்றன.

வாழ்விடம்

[தொகு]

பச்சைப் பறவை மலர் செடிகளின் வாழ்விடம் வட மேற்கு ஆஸ்திரேலியா, வட ஆள்புலம், வடக்கு தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்மேற்கு குயின்ஸ்லாந்து உள்ளிட்ட வெப்பமண்டலத்தின் வறண்ட முதல் அரை வறண்ட மண்டலப் பகுதிகளாகும். இந்தச் செடிகள் முக்கியமாக புதர் மற்றும் புல்வெளி அல்லது சவன்னா காடுகளில் நன்கு வடிநிலமான மண்ணில் வளர்கிறது. பொதுவாக பாலைவன குன்றுகள், மணல் சமவெளிகள் மற்றும் வடிகால் பகுதிகளில் வளர்கிறது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Crotalaria cunninghamii". anpsa.org.au. Archived from the original on 2021-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-08-03.
  2. "Allan Cunningham (1791 - 1839) - Pacsoa". www.pacsoa.org.au. Archived from the original on 2021-01-08. பார்க்கப்பட்ட நாள் 2019-08-04.
  3. 3.0 3.1 Kalpers, J., 2016. Traditional Ecological Knowledge of Nyangumarta Warrarn Indigenous Protected Area. [online] Ymac.org.au. Available at: <http://ymac.org.au/wp-content/uploads/2013/05/899-Ethno-booklet.pdf> [Accessed 31 May 2021].
  4. 4.0 4.1 Holland, A.E. “A Review of Crotalaria L. (Fabaceae: Crotalarieae) in Australia.” Austrobaileya, vol. 6, no. 2, 2002, pp. 293–324. JSTOR, www.jstor.org/stable/41738982. Accessed 19 Mar. 2021.
  5. "Did This Plant Evolve to Look Like a Bunch of Hummingbirds ...." 18 Jul. 2019, https://www.audubon.org/news/did-plant-evolve-look-bunch-hummingbirds. Accessed 15 May. 2021.
  6. Edwards, I., 2013. Allan Cunningham (1791 - 1839) - Pacsoa. [online] Pacsoa.org.au. Available at: <http://www.pacsoa.org.au/wiki/Allan_Cunningham_(1791_-_1839)> [Accessed 22 April 2021].
  7. "17 Flowers That Look Like Something Else | Bored Panda." https://www.boredpanda.com/flowers-look-like-animals-people-monkeys-orchids-pareidolia/. Accessed 31 May. 2021.