பச்சையாறு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கிழக்குச்சரிவில் தோன்றும் ஓர் ஆறு. இது தமிழகப் பகுதியில் உற்பத்தியாகி ஓடிப் பின்னர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் குறுக்கே வடக்கு பச்சையாறு அணை 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இவ்வாற்றின் நீளம் 32 கிலோமீட்டர்கள் ஆகும் [1].
பச்சையாற்றின் மேலே பாசனவசதிக்காக ஒன்பது அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன.[2]
எண் | அணைக்கட்டின் பெயர் | பதிவுசெய்யப்பட்ட ஆயக்கட்டு |
---|---|---|
1 | முக்கொம்பு அணைக்கட்டு | 41.02 ஏக்கர் |
2 | மடத்து அணைக்கட்டு | 141.33 ஏக்கர் |
3 | பாலம்பத்து அணைக்கட்டு | 438.89 ஹெக்டர் |
4 | பத்மநேரி அணைக்கட்டு | 681.48 ஏக்கர் |
5 | சம்பான்குளம் அணைக்கட்டு | 38.40 ஏக்கர் |
6 | தேவநல்லூர் அணைக்கட்டு | 610.70 ஹெக்டர் |
7 | காட்டாளை காடுவெட்டி அணைக்கட்டு | 85.26 ஹெக்டர் |
8 | சுப்புக்குட்டி அணைக்கட்டு | 2690.87 ஏக்கர் |
9 | பொன்னாக்குடி அணைக்கட்டு | 1383.51 ஏக்கர் |