பஞ்ச அளவைகள்

பஞ்ச அளவைகள் (Famine scales) என்பவை உணவுப் பாதுகாப்பின் படிகளை (degrees) அளவிட உதவும் வழிகள் ஆகும். இது முழு அளவிலான மக்கள்தொகையும் நல்ல உணவு கிடைக்கும் நிலைமையிலிருந்து முழு அளவிலான பஞ்சத்தைச் சந்தித்த நிலைமை வரை அளவிட உதவுகிறது. பஞ்சம் (famine) என்ற சொல்லானது மிகவும் உணர்ச்சியைத் தூண்டத்தக்க (emotive) மற்றும் அரசியல் தொடர்புகளுடைய ஒன்றாகும். பன்னாட்டு குறைதீர் கழகங்கள் (international relief agencies) உணவு உதவி (food aid) என்பதை பஞ்சத்திற்கு விளக்கமாகக் கூறிவருகின்றன. இது குறித்து இந்த அமைப்புகளிடையே இன்னும் கருத்துவேறுபாடுகள் இருந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, 1988ஆம் ஆண்டு தெற்கு சூடானில் ஒரு முழு அளவிலான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அளவிற்கொவ்வாத அளவு (disproportionate) கொடை உணவுகள் கொசோவோ போருக்கு அனுப்பப்பட்டது.