பஞ்சகூட சமணர் கோயில் | |
---|---|
பஞ்சகூட சமணர் கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கம்பதஹள்ளி, மாண்டியா மாவட்டம், கர்நாடகா |
புவியியல் ஆள்கூறுகள் | 12°52′03.6″N 76°38′00.8″E / 12.867667°N 76.633556°E |
சமயம் | சமணம் |
பஞ்சகூட சமணர் கோயில் (Panchakuta Basadi), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில், கம்பதஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது.
சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிசபநாதருக்கு அர்பணிக்கப்பட்ட அழகிய சிற்ப வேலைபாடுகள் கொண்ட பஞ்சகூட சமணக் கோயில், மேலைச் சாளுக்கியர் ஆட்சியின் போது[1], (கிபி 900 - 1000) திராவிடக் கட்டிடக்கலையில் வடிக்கப்பட்டதாகும்.[2][3]
கம்பதஹள்ளி எனும் கன்னட மொழிச் சொல்லிற்கு தூண்களின் கிராமம் எனும் பொருளாகும். கம்பதஹள்ளி கிராமத்தின் சமணக் கோயில், சமணத்தின் தொன்மையான ஊரான சரவணபெலகுளாவிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது.
போசாளர்கள் ஆட்சியில் இக்கோயில் சீரமைத்துக் கட்டப்பட்டது. [4] இக்கோயில் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய நினைவுச் சின்னமாக இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறித்துள்ளது. [3][1][5]
இக்கோயில் மூன்று அர்த்த மண்டபங்கள் மற்றும் மகாமண்டபங்களுடன் கூடிய மூன்று மூலவர்களின் சன்னதிகளைக் கொண்டது. சன்னதிகளின் நுழைவாயில்களில் திக்பாலர்கள் தங்கள் துணைவியர்களுடனும் வாகனங்களுடனும் உள்ளனர். கோயிலின் வடக்கு நோக்கிய பிரம்மதேவத் தூண் அமைந்துள்ளது. கோயிலின் முக்கிய மூலவரான ரிசபநாதரின் சன்னதியின் வலப்புறத்தில் சாந்திநாதர் சன்னதியும்; இடப்புறத்தில் நேமிநாதர் சன்னதியும் உள்ளது. தீர்த்தங்கரர்களின் சிற்பங்களின் மேற்புறத்தில் சமணக் காவல் தேவதைகளான யட்சர்கள், யட்சினிகளின் சிற்பங்கள் உள்ளன. [3][6]