பஞ்சாபி மொழி இயக்கம் (Punjabi Language Movement) என்பது பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் நகரத்தில் நடைபெற்ற ஒரு மொழியியல் இயக்கம் ஆகும். பாக்கித்தானில் கலை, பண்பாடு மற்றும் இலக்கியத்தில் பஞ்சாபி மொழி புத்துயிர் பெறுவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டதாகும். [1] [2] [3] [4] பஞ்சாபி மக்கள் பாக்கித்தான் நாட்டில் மிகப்பெரிய ஓர் இனக்குழுவாக உள்ளனர். உருது மொழி இங்கு தேசிய மொழியாக உள்ளது.[5] ஆனால் இந்திய பஞ்சாப்பில் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மட்டத்திலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதும் எழுதுவதும் கட்டாயமாகும். பாட்டியாலா நகரத்தில் ஒரு சிறப்பு பஞ்சாபி பல்கலைக்கழகமும் பஞ்சாபி மொழிக்காக இயங்குகிறது.
ஆனால் பஞ்சாபி மொழிக்கு பாக்கித்தான் பஞ்சாபில் அதிகாரப்பூர்வ தகுதியும் இல்லை.[6] பஞ்சாபி மொழி இயக்கத்தின் சித்தாந்தங்கள் பஞ்சாபி தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். .