![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
படிஞ்சரேசிரா | |
---|---|
![]() படிஞ்சரேசிரா குளத்தின் ஒரு தோற்றம் | |
அமைவிடம் | கேரளம், திருச்சூர் நகரம் |
வகை | செயற்கைக் குளம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | திருச்சூர் |
படிஞ்சரேசிரா (மலையாளம் :പടിഞ്ഞാറെ ചിറ, மேற்கு நீர்த்தேக்கம்) என்பது இந்தியாவின், கேரளத்தின், திரிசூர் நகரில் உள்ள நான்கு பழமையான குளங்களில் ஒன்றாகும். இது கொச்சியின் மன்னரான சக்தன் தம்புரன் (1751-1805) என்பவரால் கட்டப்பட்டது. இது திரிசூரின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாகும். இது வடக்கே மடத்துக்குச் சொந்தமானது.
கொச்சி மன்னர் சக்தன் தம்புரான், தனது ஆட்சியில் நீர் மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன நோக்கத்திற்காக திருச்சூர் நகரில் நான்கு குளங்களை வெட்டினார். அவை வடகீச்சிரா, படிஞ்சேசிரா, தெக்கேசிரா, கிழக்கேசிரா ஆகும். [1] இவற்றில், பிந்தைய இரண்டு குளங்கள் அழிவுற்றன.