படிலா யூசோப் Fadillah Yusof فضيلة يوسف | |
---|---|
2021-இல் படிலா யூசோப் | |
14-ஆவது மலேசிய துணைப் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 திசம்பர் 2022 | |
ஆற்றல் மாற்றம்; நீர் உருமாற்ற அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 பிப்ரவரி 2024 | |
தொகுதி | பெட்ரா ஜெயா |
ஆற்றல் மாற்றம்; பொதுப் பணி அமைச்சர் | |
பதவியில் 12 திசம்பர் 2023 – 7 பிப்ரவரி 2024 | |
தொகுதி | பெட்ரா ஜெயா |
தோட்டத் தொழில்; மூலப் பொருட்கள் அமைச்சர் | |
பதவியில் 3 திசம்பர் 2022 – 12 திசம்பர் 2023 | |
பொதுப் பணி அமைச்சர் | |
பதவியில் 30 ஆகஸ்டு 2021 – 24 நவம்பர் 2022 | |
உள்கட்டமைப்பு மேம்பாட்டு மூத்த அமைச்சர் | |
பதவியில் 10 மார்ச் 2020 – 16 ஆகஸ்டு 2021 | |
பொதுப் பணி அமைச்சர் | |
பதவியில் 30 ஆகஸ்டு 2021 – 24 நவம்பர் 2022 | |
பதவியில் 10 மார்ச் 2020 – 16 ஆகஸ்டு 2021 | |
பதவியில் 16 மே 2013 – 10 மே 2018 | |
அறிவியல், தொழில்நுட்பம்; புத்தாக்கத் துணை அமைச்சர் | |
பதவியில் 19 மார்ச் 2008 – 15 மே 2013 | |
மூத்த துணைத் தலைவர் ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017 | |
பெட்ரா ஜெயா மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 மார்ச் 2004 | |
பெரும்பான்மை | 12,816 (2004) 14,397 (2008) 21,443 (2013) 15,017 (2018) 41,363 (2022) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Fadillah bin Yusof 17 ஏப்ரல் 1962 சிபு, பிரித்தானிய சரவாக் முடியாட்சி (தற்போது, மலேசியா) |
அரசியல் கட்சி | ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (PBB) (1989) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் நேசனல் (BN) (1989–2018) சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (2018) |
துணைவர் | ருசியா முகமட் தாகிர் |
பிள்ளைகள் | 5 |
முன்னாள் கல்லூரி | மலாயா பல்கலைக்கழகம் (LLB) |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
படிலா யூசோப் (ஆங்கிலம்; Fadillah Yusof; மலாய்: Dato Sri Haji Fadillah bin Haji Yusof) (பிறப்பு: 17 ஏப்ரல் 1962) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆவார். 2022-ஆம் ஆண்டு திசம்பர் 3-ஆம் தேதி தொடங்கி இவர் 14-ஆவது மலேசிய துணைப் பிரதமராக பதவி வகிக்கிறார்.
இவர் மலேசியாவின் போர்னியோ மாநிலங்களில் ஒன்றான சரவாக் மாநிலத்தின், அம்னோ (UMNO) கட்சி சாராத முதல் மலேசிய துணைப் பிரதமர் ஆவார். அம்னோ கட்சி சாராத மக்கள் நீதிக் கட்சியின் (PKR) வான் அசிசா வான் இசுமாயிலுக்கு பிறகு இவர் இரண்டாவது மலேசிய துணைப் பிரதமர் ஆவார்.
இவர் சரவாக் கட்சிகள் கூட்டணியின் (GPS) ஓர் உறுப்புக் கட்சியான ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சியின் (PBB) மூத்த தலைவர்களில் ஒருவராவார்.[1]
படிலா யூசோப் 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி சரவாக், சிபுவில் உள்ள கம்போங் ஈலீர் கிராமத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் யூசோப் மெரைசு (1927–2018); தாயாரின் பெயர் தயாங் ரோசுனா அபாங் மாடேலி (1932–2023). 14 உடன்பிறப்புகளில் இவர் ஒன்பதாவது குழந்தை.
தன் கல்வியை சரவாக் சிபுவில் உள்ள செயின்ட் மேரிஸ் ஆரம்பப் பள்ளியிலும்,பேராக், பாரிட் புந்தார் பங்லிமா புக்கிட் கந்தாங் இடைநிலைப் பள்ளியிலும் பயின்றார். 1986-இல், அவர் மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலை (LLB) பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞரானார்.
1989-இல், அந்தக் கட்டத்தில் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்த ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சியில் (Parti Pesaka Bumiputera Bersatu) (PBB) ஓர் உறுப்பினராகச் சேர்ந்தார். 11-ஆவது மலேசியப் பொதுத் தேர்தலில் முதன்முதலில் மலேசிய மக்களவைக்குப் போட்டியிட்டார்.[2] அந்தத் தேர்தலில் அவர் பெட்ரா ஜெயா மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் வெற்றி பெற்றார்.
12-ஆவது மலேசிய பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவரை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் துணை அமைச்சராக பிரதமர் அப்துல்லா அகமது படாவி நியமித்தார்.[3]
13-ஆவது மலேசிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பிரதமர் நஜீப் ரசாக்கின் புதிய அமைச்சரவையின் கீழ் அவர் பொதுப்பணித்துறை அமைச்சில் முழு அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். 14-ஆவது மலேசியப் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான சரவாக் கட்சிகள் கூட்டணியின் (GPS) சார்பில், மலேசிய மக்களவையில், தலைமைக் கொறடாவாக படிலா யூசோப் நியமிக்கப்பட்டார்.
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், படிலா யூசோப் தம்முடைய பெட்ரா ஜெயா மக்களவைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த முறை அவர் குறிப்பிடத்தக்க பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, எந்த ஒரு கட்சியும் மத்திய அரசை அமைக்க பெரும்பான்மையைப் பெறவில்லை.
இதன் விளைவாக, யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முசுதபா பில்லா சா ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க முன்மொழிந்தார். இறுதியில், 24 நவம்பர் 2022 அன்று, அன்வார் இப்ராகிம் ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2 டிசம்பர் 2022 அன்று அமைச்சரவை அறிவிப்பில், அகமத் சாகித் அமிடியுடன் துணைப் பிரதமராக படிலா யூசோப் அவர்களும் நியமிக்கப்பட்டார். அதே வேளையில், அவருக்கு மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
மலேசியா உருவான பிறகு, சரவாக்கில் இருந்து, நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியல் பதவியை வகிக்கும் முதல் நபர் படிலா யூசோப் ஆவார். இவரின் நியமனம் சரவாக் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அறியப்படுகிறது.
ஆண்டு | அரசு | வாக்கு | % | எதிரணி | வாக்கு | % | ||
---|---|---|---|---|---|---|---|---|
2004 | படிலா யூசோப் (பாரிசான்-பூமிபுத்ரா கட்சி) |
18,236 | 75% | வான் சைனல் அபிதீன் வான் செனுசி (பிகேஆர்) |
5,420 | 22% | ||
2008 | படிலா யூசோப் (பாரிசான்-பூமிபுத்ரா கட்சி) |
19,515 | 78% | முகமது ஜோலி (பிகேஆர்) |
5,118 | 20% | ||
2013 | படிலா யூசோப் (பாரிசான்-பூமிபுத்ரா கட்சி) |
29,559 | 78% | அகமத் நஜிப் ஜொகாரி (பிகேஆர்) |
8,116 | 22% | ||
2018 | படிலா யூசோப் (பாரிசான்-பூமிபுத்ரா கட்சி) |
28,306 | 48.9% | இர்வான் அகமத் நோர் (பிகேஆர்) |
13,289 | 22.9% |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
படிலா யூசோப் (Fadillah Yusof) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 54,745 | 79.15 | 79.15 | |
சோபியான் சூலைகி (Sopian Julaihi) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 13,382 | 19.35 | 11.59 ▼ | |
ஒசுமான் அப்தில்லா (Othman Abdillah) | சரவாக் மக்கள் உணர்வுக் கட்சி (SEDAR) | 1,036 | 1.50 | 1.50 | |
மொத்தம் | 69,163 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 69,163 | 98.70 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 911 | 1.30 | |||
மொத்த வாக்குகள் | 70,074 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,09,809 | 62.98 | 12.14 ▼ | ||
Majority | 41,363 | 59.8 | 24.83 | ||
மூலம்: [5] |