பட்கால் ஏரி Badkhal Lake | |
---|---|
2008-ஆம் ஆண்டில் வறண்டு கிடக்கும் பட்கல் ஏரி | |
அமைவிடம் | பரீதாபாது |
ஆள்கூறுகள் | 28°24′54″N 77°16′34″E / 28.415°N 77.276°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | பரீதாபாது |
பட்கால் ஏரி (Badkhal Lake) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பரீதாபாது நகரின் அருகிலுள்ள பட்கால் சிற்றூர்ப் பகுதியில் அமைந்துள்ள ஏரி ஆகும்.[1][2] இந்த ஏரி, தலைநகர் தில்லியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டிலிருந்து மழைப்பொழிவின்மையால் ஏரி வறண்டு போனது. 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் நடைபெற்றபோது இந்த ஏரியில் செயற்கையாக நீர் நிரப்பப்பட்டது. எனினும் 2014 இல் நடத்தப்பட்ட தில்லி அரசுசார் கருத்தாய்வில் இந்த ஏரி உட்பட்ட தில்லியின் 190 நீர்நிலைகள் வறண்டுபோனதாக அறிக்கை தரப்பட்டது.[3]