பட்டணம் (Pattanam) அல்லது பச்சணம் என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது வடக்கு பரவூருக்கு வடக்கே 2 கி.மீ தொலைவிலும், சேந்தமங்கலத்தின் கிழக்கே 6 கி.மீ தொலைவிலும், கொச்சிக்கு (கொச்சின்) வடக்கே 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சமீபத்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின்படி, பட்டணம் முதன்முதலில் கி.மு 1000 ல் ஒரு பழங்குடி மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.[1][2]
கஞ்சிரப்புழா ஆற்றின் ஒரு கிளை, கஞ்சிரப்புழா தோடு (கஞ்சிரப்புழா கால்வாய்) என்று அழைக்கப்படுகிறது. இது பட்டணத்திற்கு அருகில் ஓடுகிறது. செயற்கைக்கோள் படங்கள், தெளிவான புவியியல் சான்றுகள், பட்டணத்தின் பழைய பெயர் பச்சணம் என்று சுட்டிக்காட்டிகிறது. மேலும், பட்டணத்தில் வசிப்பவர்கள் தரையில் தோண்டும்போது அதிக அளவில் உடைந்த மட்பாண்டத் துண்டுகள் மற்றும் பழங்கால எரிக்கப்பட்ட செங்கற்களைக் கண்டுபிடித்தனர். பட்டணத்தின் பழைய பெயர் பஷ்ணம் என்பதாகும் பட்டணத்தின் சந்திப்பு பஷ்ணம் காவலம் என்று அழைக்கப்படுகிறது.
பட்டணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான தளம் (10 ° 09.434'N; 76 ° 12.587'E) சுமார் 45 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. வசிப்பிட நடவடிக்கைகள் காரணமாக இது ஒரு "தொந்தரவு" தளம்; மணல் குவாரி காரணமாக சில பகுதிகள் ஓரளவு அழிக்கப்பட்டன. கிமு 1000 இல் இந்த இடம் முதன்முதலில் பழங்குடி மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. இரும்பு காலத்தின் அடுக்கு மற்றும் துறைமுகச் சூழல்களில் இருந்து மர மாதிரிகள் அவற்றின் பழங்காலத்தை கி.மு. முதல் மில்லினியம் என தீர்மானித்தன.[3]
2007 முதல் பட்டணத்தில் கேரள வரலாற்று ஆராய்ச்சிக்கான ஆனையம் மேற்கொண்ட பல ஒழுங்கு மற்றும் பல பருவகால தொல்பொருள் ஆராய்ச்சி கேரள தொல்பொருள் வரலாற்றில் ஒரு முன்னோடி முயற்சியாகும். தெற்காசிய ஆய்வுகளுக்கான பிரித்தன் அமைப்பு சமீபத்தில் பட்டணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச ஆய்வுக் குழுவை அமைப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.[4]
சதுர செப்பு நாணயங்கள் (ஒரு பக்கத்தில் ஒரு யானை மற்றும் மறுபுறம் வில் மற்றும் அம்புகள்) இந்த இடத்தில் காணப்பட்டன. இந்த வகையான நாணயங்கள் கிறித்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. அதே சமயம் பட்டணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள் குறிப்பாக உரோமில் இருந்து வந்தன என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. இவை நேரடியாக இத்தாலியுடன் இணைக்கப்பட்டுள்ளன என்ற தகவலைப் பெறுவது அவசியம். [5]
தோண்டிய தொல்பொருட்களில் சேர நாணயங்கள், ஆம்போரா பானைகள், களிமண் பானைகள், விலைகுறைந்த கற்களால் ஆன ஆபரணங்கள், கல் மற்றும் கண்ணாடி மணிகள் ஆகியவை பெரிய அளவில் உள்ளன. எரிந்த செங்கற்களால் செய்யப்பட்ட செங்கல் கட்டமைப்புகளின் எச்சங்களும் இங்கு காணப்படுகின்றன. காட்டு பலா (அஞ்சிலி) மரத்தின் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆறு மீட்டர் அளவுள்ள படகு மற்றும் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தடுப்புகள் மற்றும் ஒரு பெரிய அளவிலான தாவரவியல் எச்சங்கள் கொண்ட ஒரு துறைமுகச் சூழல் காணப்பட்டது.
2010ல் அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளில் சிறிய அளவிலான தொல்பொருட்கள் - விலைமதிப்பு குறைந்த கற்கள் மற்றும் கண்ணாடி, பதக்கங்கள் அல்லது பதக்கங்கள் [6] ஆபரணங்கள், நாணயங்கள், (முக்கியமாக ஆரம்பகால சேர நாணயங்கள், யானை, வில் மற்றும் அம்புகளின் அடையாளங்களுடன்) இரும்புப் பொருள்கள் அல்லது இரும்புப் பொருட்களின் துண்டுகள், தாமிரம், ஈயம் மற்றும் அரிதாக தங்கம், மற்றும் இந்திய மற்றும் வெளிநாட்டு மட்பாண்டங்களின் உடைந்த பகுதிகள் ஆகியன அடங்கும். பிராமி எழுத்துகளுடன் உடைந்த மட்பாண்டத்தின் விளிம்பு போன்றவைகளும் இருந்தன. பட்டணத்தில் முதல் சுடுமண்ணால் செய்யப்பட்ட மட்பாண்ட எழுத்துகள் இதுவாகும். ஆரம்பகால வரலாற்று காலத்தின் உள்ளூர் மட்பாண்டங்களின் மகத்தான அளவு, இது கிமு முதல் நூற்றாண்டுக்கும் கிபி நான்காம் நூற்றாண்டுக்கும் இடையில் தேதியிடப்பட்டுள்ளது. இது பட்டணத்தின் உச்ச செயல்பாட்டு நிலை என்பதைக் காட்டுகிறது.
2011ல் பட்டணத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் பண்டைய கேரளாவின் வாழ்க்கை மற்றும் காலங்களில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு கண்டுபிடிப்புகள் இரும்பு மற்றும் செப்பு ஆணிகள், உரோமன் கண்ணாடி, சோழ நாணயங்கள், டெரகோட்டா மற்றும் விலைகுறைந்த கல் மணிகள் ஆகியவை அடங்கும். [7]
பட்டணத்தை முசிறித் துறைமுகமாக அடையாளம் காண இன்னும் நேரம் வரவில்லை என்று தமிழக மாநில தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஆர்.நாகசாமி கருதுகிறார். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு கொடுங்கல்லூரும் தோண்டப்பட வேண்டும். எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன்பு தொல்பொருளியல் நிறைய சான்றுகள் தேவை என்கிறார். [5] ரூமிலா தாப்பர் பண்டைய மூலக்கூறு ஆய்வு மாதிரி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பாக்டீரியா மாசுபாடு அல்லது பிறழ்வுகள் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்கிறார். எவ்வாறாயினும், பட்டணத்தை "இந்தியாவின் கடல் உறவுகள் பற்றிய ஆய்வுகளுக்கான ஒரு திருப்புமுனை" என்று அவர் விவரிக்கிறார். [8] . புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எம். ஜி. எஸ். நாராயணன், பட்டனம் முசிறி அல்ல என்றும், முசிறித் துறைமுகம் கொடுங்கல்லூர்தான் என்றும் கூறுகிறார். கொடுங்கல்லூரை ஆட்சி செய்து வந்த இரண்டாவது சேர வம்சத்தின் கி.பி 1000 ஆம் ஆண்டின் யூத செப்பு தகடு எழுத்துகள் கொடுங்கல்லூரை முயிறிக்கோடு என்று கூறுகின்றன. "முசிறிக்கோட்டு" என்பது முசிறின் மற்றொரு பெயராகும். கொடுங்கல்லூர்தான் முசிறி என்பதற்கு இதுவே தெளிவான சான்றாகும். எம். ஜி. எஸ் கேரளாவின் கொடுங்கல்லூர் அகழ்வாராய்ச்சியிலும் பங்கேற்றார் (1969-70). கொடுங்கல்லூரின் சேரர்களைக் குறிப்பிடும் பல இடைக்கால வத்தேலுட்டு கல்வெட்டுகளையும் அவர் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார். சேரர்களின் புகழ்பெற்ற அரண்மனை வளாகத்தின் இருப்பிடமான சேரமான் பரம்பு (கொடுங்கல்லூர்) என்ற இடத்தில் எம். ஜி. எஸ் தனியாக ஒரு இரவு கழித்ததாகக் கூறப்படுகிறது. பண்டைய சிறீகுரும்பன் கோயில், திரிகுலசேகரபுரம் சிவன் கோயில், கீழத்தலி சிவன் கோயில், திருவஞ்சிக்குளம் கோயில், திரிக்கண்ணமத்திலகம் சமண கோயில் போன்றவை கொடுங்கல்லூரில் அமைந்துள்ளன. சங்க கால இலக்கியங்களில் இந்த கோயில்கள் பற்றிய பல விவரங்கள் உள்ளன.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) (http://www.thehindu.com/todays-paper/tp-international/Recognition-from-U.K.-for-Pattanam-research/article16640121.ece http://www.kchr.ac.in/