பட்டணம் சுப்பிரமணிய ஐயர்

பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
பிறப்பு1845 (1845)
திருவையாறு, இந்தியா
இறப்பு31 சூலை 1902 (அகவை 57)
பணிகருநாடக இசைக் கலைஞர்
அறியப்படுவதுகருநாடக இசை
குறிப்பிடத்தக்க படைப்புகள்இரகுவம்ச சுதா, எவரி போதன்னா

பட்டணம் சுப்பிரமணிய ஐயர் (Patnam Subramania Iyer, 1845 - 31 சூலை 1902) கர்நாடக இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார். தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவரும் தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றியவருமான தியாகராஜரின் பாரம்பரியத்தை சுப்பிரமணிய ஐயர் பின்பற்றினார். கிட்டத்தட்ட நூறு பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

சுப்பிரமணிய ஐயர் இன்றைய தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறில் பிறந்தார். இவரது தந்தை பாரதம் வைத்தியநாத ஐயர் இசை மற்றும் சாஸ்திரம் ஆகிய இரண்டிலும் திறமையானவர். இவரது தாத்தா பஞ்சநாத சாஸ்திரி தஞ்சாவூர் மன்னர் இரண்டாம் சரபோஜியின் அரசவையில் அரசவை இசைக்கலைஞராக இருந்தார். சுப்பிரமணிய ஐயர் தனது மாமா மேலத்தூர் கணபதி சாஸ்திரியிடமும், பின்னர் தியாகராஜரின் சீடரான மானம்புச்சவாடி வெங்கடசுப்பய்யரின் கீழும் இசையைக் கற்றுக்கொண்டார்.

சீடர்கள்

[தொகு]

சுப்பிரமணிய ஐயர் சென்னையில் நீண்ட காலம் கழித்தார். இது சுப்பிரமணிய ஐயர் என்ற இவரது பெயருக்கு முன்னொட்டு வழங்கியது. மைசூர் வாசுதேவச்சார், பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்கர், பைரவி கெம்பேகவுடா மற்றும் டைகர் வரதாச்சாரியார் போன்ற இவரது மாணவர்கள் பலர் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களாகவும் பாடகர்களாகவும் ஆனார்கள். இவரது அண்டை வீட்டுக்காரர் மகா வைத்தியநாதையரும் ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞராக இருந்தார்.

கதனகுத்துஹலம் இராகத்தில் அமைந்த இரகுவம்ச சுதா மற்றும் ஆபோகி இராகத்தில் அமைந்த எவரி போதன்னா[1] ஆகிய இரண்டும் இவரது புகழ்பெற்ற பாடல்களில் அடங்கும். தெலுங்கு மற்றும் சமசுகிருதத்தில் இவர் எழுதிய பாடல்களில் தனது குருவின் முத்திரையை ‘வெங்கடேசா’ என்றும் அல்லது அதன் மாறுபாடுகளைப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.[2]

மைசூர் மன்னர் பத்தாம் சாமராச உடையார் அரசவையில் பாடலைப் பாடிய பிறகு இரண்டு முறை இவருக்கு தங்க வளையல்கள் பரிசாக வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sruti. P.N. Sundaresan. 1998. p. 44. பார்க்கப்பட்ட நாள் 27 May 2021.
  2. "ERA NAPAI". www.shivkumar.org. பார்க்கப்பட்ட நாள் 2016-05-17.