பட்டனிக் கலைஞர்கள் (Hunger artist) என்பவர்கள் 18, 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்த கலைஞர்கள் ஆவர். இவர்கள் பணம் செலுத்தி வரும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக, நீண்ட காலத்திற்கு பட்டினிக் கிடந்தனர். இந்த நிகழ்வு முதன்முதலில் 17 ஆம் நூற்றாண்டில் தோன்றியது, 1880 களில் அதன் உச்சத்தை அடைந்தது. பட்டினிக் கலைஞர்கள் எல்லோரும் ஆண்களாகவே இருந்தனர். ஒவ்வொரு நகரமாக சென்று பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட உண்ணா நோன்பை 40 நாட்கள் வரை மேற்கொண்டனர்.[1] பல பட்டினிக் கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளின் போது பிறரை ஏமாற்றியது கண்டறியப்பட்டது.[2]
பிரான்ஸ் காஃப்காவின் 1922 ஆண்டைய சிறுகதையான "எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட்", அதே பெயரிலான சிறுகதை தொகுப்பில் உள்ளது.
பட்டினிக் கலைஞர்களாக "வாழும் எலும்புக்கூடுகள்" போன்று உள்ளவர்கள், குறைந்த உடல் எடை கொண்டவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் இடம்பெற்றனர்.[3]