பட்லர் வரையன் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | கொலுபிரிடே
|
துணைக்குடும்பம்: | கொலும்பிரினே
|
பேரினம்: | லைகோடான்
|
இனம்: | லை. பட்லேரி
|
இருசொற் பெயரீடு | |
லைகோடான் பட்லேரி பெளலஞ்சர், 1900 |
பட்லர் வரையன் பாம்பு (Butler's wolf snake) என்று அழைக்கப்படும் லைகோடான் பட்லேரி (Lycodon butleri), கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[2] இந்தச் சிற்றினம் தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியாவினைப் பூர்வீகமாகக் கொண்டவை.[1]
சிலாங்கூர் மாநில அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளரான இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் ஆர்தர் லெனாக்சு பட்லரின் பெயரால் லைகோடான் பட்லேரி என இப்பாம்பு பெயரிடப்பட்டது.[2][3]
பட்லர் வரையன் பாம்பு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]
லைகோடான் பட்லேரி என்பது லைகோடான் பேரினத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினம். பொதுவாக ஓநாய் பாம்புகள் அல்லது வரையன் பாம்புகள் என்று அழைக்கப்படும் பாம்புகளின் பேரினமாகும்.[4] இந்தப் பேரினம் பாம்பு குடும்பமான கொலுப்ரிடேவைச் சேர்ந்தது. இது மிகப்பெரிய பாம்பு குடும்பமாகும். அந்தாட்டிக்காவைத் தவிர அனைத்துக் கண்டத்திலும் இந்தப் பாம்புச் சிற்றினங்கள் காணப்படுகின்றன.[5]
லை. பட்லேரி என்பது ஒரு நிலப்பரப்பில் வாழும் சிற்றினமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1,100 முதல் 1,500 மீ (3,600 முதல் 4,900 ) உயரத்தில் உள்ள மலைப்பாங்கான காடுகளில் காணப்படுகிறது.[1] பகுதி நேரங்களில் மரங்களில் வாழக்கூடியது.[2]
லை. பட்லேரி தெற்கு தாய்லாந்தில் உள்ள கிராபி மாகாணத்திலிருந்தும், மலேசியா தீபகற்பத்திலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]
2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் லைகோடான் பட்லேரி "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக" கருதுகிறது. இந்தச் சிற்றினம் பெரிய அளவில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை. மேலும் மக்கள்தொகை போக்குகள் குறித்தும் எதுவும் அறியப்படவில்லை.[1]