முகாமைத்துவ கணக்கீட்டில் பணமாற்று சுழற்சி முறையானது (Cash conversion cycle) தனது வாடிக்கையாளர் விற்பனை பிரிவை விரிவாக்குவதற்காக மூலவளத்தில் (resources) அதிகமாக முதலீடு செய்யும்போது அந் நிறுவனம் பணம் இல்லாமல் எவ்வாறு நீண்டகாலம் தொழிற்படுகின்றது என்பதை அளவீடு செய்கின்றது[1]. அதாவது இது நீர்மத்தன்மை ஆபத்தை (liquidity risk) வளர்ச்சி மூலம் எவ்வாறு அளவீடு செய்வது என்பதை குறிப்பிடுகின்றது[2]. எனினும் பணமாற்று சுழற்சியை குறைப்பதிலும் இடர்கள் உருவாகும்: தான் பொருட்கள் வாங்கியவர்களுக்கு பணம் செலுத்தும் முன் தனது வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெறுவதன் மூலம் ஒரு நிறுவனம் மறை பணமாற்று சுழற்சியை (negative ccc) அடையமுடியும். கடுமையான பண வசூலிப்பும் வரி செலுத்தும் கொள்கைகளும் எப்போதும் நிரந்தரமானது அல்ல.