பண்டார் காசியா | |
---|---|
Bandar Cassia | |
![]() | |
![]() பண்டார் காசியா சாலை அறிவிப்பு | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°11′N 100°26′E / 5.183°N 100.433°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | தென் செபராங் பிறை மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | mpsp |
பண்டார் காசியா அல்லது காசியா நகரம் (ஆங்கிலம்: Bandar Cassia அல்லது Cassia City; மலாய்: Bandar Cassia; சீனம்: 桂花城) மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் (South Seberang Perai District); புதிதாக உருவாக்கப்பட்ட நகரம் ஆகும்.
1990-ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தின் பாயான் லெப்பாஸ் மற்றும் பிறை தொழில்துறை நகரத்தைப் போல பத்து காவான் (Batu Kawan) நகரத்தையும் மாற்றம் செய்வதற்கு பினாங்கு மாநில அரசு முடிவு செய்தது. அதன் விளைவாக 1993-ஆம் ஆண்டு இந்த பண்டார் காசியா நகரம் பினாங்கு மேம்பாட்டு கழகத்தால் (Penang Development Corporation) (PDC) (PERDA) உருவாக்கப்பட்டது.[1]
பண்டார் (Bandar) என்றால் மலாய் மொழியில் நகரம்; காசியா (Cassia) என்றால் கருவாமர வகையைச் சார்ந்த இலவங்க மரம். இந்த மரங்கள் மஞ்சள் நிறப் பூக்களைப் பூக்கும். பத்து காவான் பகுதியில் இந்த வகை மரங்கள் இருந்ததால் இந்த நகரத்திற்கும் பண்டார் காசியா என்று பெயர் வைக்கப்பட்டது.[2]
பண்டார் காசியா நகரத்திற்கு வடக்கில் பத்து காவான் பழைய மாவட்டமும் கிழக்கில் புக்கிட் தம்பூன் (Bukit Tambun) புறநகர்ப்பகுதியும் உள்ளன. செயற்கை நகரமான பத்து காவான் நகரத்தின் (Satellite City) ஒரு பகுதியாக பண்டார் காசியா நகரம் விளங்குகிறது.
பத்து காவான் புறநகர்ப் பகுதி சுமார் 6,700 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. அதில் 92% அல்லது சுமார் 6,326 ஏக்கர்; 1990-ஆம் ஆண்டில் பினாங்கு மேம்பாட்டு கழகத்திற்கு அப்போதைய பினாங்கு முதல்வர் டான்ஸ்ரீ கோ சு கூன் (Koh Tzu Koon) அவர்களால் வழங்கப்பட்டது. நிதிப் பற்றாக்குறையினால் மேம்பாட்டுத் திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை.[3]
2004-ஆம் ஆண்டில், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்காக அந்த 6,326 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதி இக்குவைன் கேப்பிட்டல் (Equine Capital) எனும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்திற்கு பண்டார் காசியா என்று பெயரிடப்பட்டது.
பண்டார் காசியாவின் கட்டுமானம் 2011-இல் தொடங்கியது. பாயான் பாரு (Bayan Baru) மற்றும் செபராங் ஜெயா (Seberang Jaya) ஆகிய முன்னோடி செயற்கை நகரங்களுக்கு அடுத்தபடியாக பினாங்கின் மூன்றாவது செயற்கை நகரமாக (Third Satellite City) பண்டார் காசியாவை உருவாக்குவதே பினாங்கு மாநில அரசாங்கத்தின் இலக்காகும். பண்டார் காசியா நகரக் கட்டுமானங்கள் 10 ஆண்டுகள் நீடித்தன.[3]
கட்டுமானங்களில் குடியிருப்பு வீடுகள், கல்வி வளாகங்கள், வணிக வளாகங்கள் என அவற்றின் மொத்த எண்ணிக்கை 34,685 ஆகும். பல்கடை அங்காடிகள் (Shopping Malls), பொதுப் பூங்கா (People's Park), இரவுச் சந்தை (Night Market), திறந்தவெளி அரங்கம் (Auditorium), பாய்மரப்படகுத் துறை (Yacht Marina), சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் (Eco-Tourism), மீனவர் படகுத் துறை (Fisherman's Wharf), நீரூற்று பூங்கா என பல்வகை மையங்கள் கட்டப்பட்டன. 700 மில்லியன் ரிங்கிட் வரை செலவு செய்யப்பட்டது.
ஒன்பதாவது மலேசியா திட்டத்தின் (Ninth Malaysia Plan) கீழ் பினாங்கு இரண்டாவது பாலம் கட்டப்பட்டபோது, பத்து காவான் நகரத்தை ஒரு நவீனமான செயற்கை நகரமாக மாறுவதற்கான இலட்சியமும் உருவானது.
பினாங்கு இரண்டாவது பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு அடைந்ததும், பினாங்கு தீவு மக்கள் பண்டார் காசியாவில் சொத்துக்களை வாங்க முன்வந்தனர்.
2014-இல் பினாங்கு இரண்டாவது பாலம் கட்டி முடிக்கப்பட்டதும்; பினாங்கு தீவில் இருந்து செபராங் பிறைக்கு செல்லும் புதிய நுழைவாயிலாக பண்டார் காசியா நகரம் மாற்றம் கண்டது.
{{cite web}}
: Unknown parameter |dead-url=
ignored (help)