பண்டார் செரி டாமன்சாரா Bandar Sri Damansara
PJU9 | |
---|---|
![]() பண்டார் செரி டாமன்சாரா (2023) | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°11′N 101°36′E / 3.183°N 101.600°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
மாநகராட்சி | ![]() |
அமைவு | 1996 |
பரப்பளவு | |
• மொத்தம் | 5.49 km2 (2.12 sq mi) |
மக்கள்தொகை (அக்டோபர் 2022) | |
• மொத்தம் | 5,01,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 52200 |
பண்டார் செரி டாமன்சாரா (மலாய்; ஆங்கிலம்: Bandar Sri Damansara); சீனம்: 斯里白沙罗镇) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் (Petaling District) 5.49 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி ஆகும்.
பண்டார் செரி டாமன்சாரா நகரியம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது; வடக்கில் SD1-SD5 பிரிவு; மற்றும் தெற்கில் SD7-SD15 பிரிவு; இந்த இரண்டு பிரிவுகளும் கோலா சிலாங்கூர்-கெப்போங் நெடுஞ்சாலையால் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நகரியம், வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் கலவைகள் கொண்ட அமைப்பைக் கொண்டுள்ளது. பண்டார் செரி டாமன்சாரா என்பது பெட்டாலிங் ஜெயா உத்தாரா 9 (Petaling Jaya Utara 9) (PJU 9) எனும் மாவட்டக் குறியீட்டுடன், கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு; மற்றும் வணிக மண்டலமாகும்.
பண்டார் செரி டாமன்சாரா நகரியத்தின் வடக்கே டாமன்சாரா பெர்டானா (Petaling Jaya Utara 8) (PJU 8) குடியிருப்பு பகுதியும்; கிழக்கே டாமன்சாரா டாமாய் (Petaling Jaya Utara 10) (PJU 10) குடியிருப்பு பகுதியும் உள்ளன.
பெட்டாலிங் ஜெயாவில் கோலாலம்பூரின் அஞ்சல் குறியீட்டைப் பயன்படுத்தும் ஒரே நகரியம் இந்தப் பண்டார் செரி டாமன்சாரா ஆகும்.
பண்டார் செரி டாமன்சாராவிற்குக் கீழ்க்காணும் சாலைகளின் வழியாகச் செல்லலாம்.[1]
பண்டார் செரி டாமன்சாராவிற்குக் கீழ்க்காணும் எம்ஆர்டி தொடருந்து நிலையங்களின் வழியாகச் செல்லலாம்.[2]
PY06 செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம்
PY08 செரி டாமன்சாரா தீமோர் எம்ஆர்டி நிலையம் புத்ராஜெயா வழித்தடம்
பண்டார் செரி டாமன்சாராவிற்குக் கீழ்க்காணும் ரேபிட் கேஎல் பேருந்துகளின் மூலமாகச் செல்லலாம்.