பண்டார் தாசேக் செலாத்தான்

பண்டார் தாசேக் செலாத்தான்
Bandar Tasik Selatan
கோலாலம்பூர்
பண்டார் தாசேக் செலாத்தான் இஆர் நிலையம்
பண்டார் தாசேக் செலாத்தான் இஆர் நிலையம்
Map
ஆள்கூறுகள்: 3°04′19.24″N 101°42′34.49″E / 3.0720111°N 101.7095806°E / 3.0720111; 101.7095806
நாடு மலேசியா
கூட்டரசு நிலப்பகுதி கோலாலம்பூர்
நகர்ப்புறம்பண்டார் தாசேக் செலாத்தான்
நாடாளுமன்றத் தொகுதிபண்டார் துன் ரசாக்
அரசு
 • நகராண்மைகோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
57000
மலேசியத் தொலைபேசி எண்+6-03 22
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்W
V
இணையதளம்www.dbkl.gov.my

பண்டார் தாசேக் செலாத்தான், (மலாய்: Bandar Tasik Selatan; ஆங்கிலம்: Bandar Tasik Selatan;) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் (Federal Territory of Kuala Lumpur) சுங்கை பீசி பகுதியில் உள்ள ஒரு புறநகரம்.

அந்தப் புறநகரம் கோலாலம்பூரின் தெற்கில், நகர மையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் கூச்சாய் லாமா, சாலாக் சவுத் மற்றும் புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது. 1991-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நகரம் ஆகும்.

பொது

[தொகு]

கோலாலம்பூரின் தொடக்கக் காலத்தில் வளர்ச்சி அடைந்த பகுதிகளில் பண்டார் தாசேக் செலாத்தான் - சுங்கை பீசி பகுதியும் ஒன்றாகும். அவற்றின்ன் பொருளாதாரத் தூண்களாக ஈயச் சுரங்கங்கள் இருந்தன. அந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய திறந்தவெளி ஈயச் சுரங்கம் (Sungei Besi Tin Mine) இங்குதான் இருந்தது.[1]

தற்போது ​​பெரும் கோலாலம்பூர் பகுதியின் பொருளாதார மையமாக மாற்றம் அடைந்துள்ளது. இரும்புத் தளவாடப் பொருள்கள் தயாரித்தல்; கனரக இயந்திரங்கள் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. பண்டார் தாசேக் செலாத்தான் - சுங்கை பீசி உள்ளூர் பகுதியில் கைவிடப்பட்ட ஏராளமான ஈயச் சுரங்கங்கள், இப்போது செயற்கைச் சுரங்க ஏரிகளாக மாற்றம் கண்டுள்ளன.[2]

தொடருந்து பேருந்து நிலையம்

[தொகு]

இந்த நகரில் ஒரு பெரிய இடைமாற்று தொடருந்து பேருந்து நிலையம் உள்ளது. இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தை பயன்படுத்தும் கேடிஎம் கொமுட்டர் கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகள்; செரி பெட்டாலிங் மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து ஆகியவற்றுக்கான நிறுத்தமாகவும் பரிமாற்ற முனையமாகவும் செயல்படுகிறது.[3]

அத்துடன் கொமுட்டர் தொடருந்துகளுக்கும்; இலகு விரைவு தொடருந்துகளுக்கும்; மற்றும் நீண்டதூர பேருந்துகளுக்கும் ஒரு பல்வகை போக்குவரத்து முனையமாகவும் (Terminal Bersepadu Selatan) (TBS) இயங்குகிறது. இருப்பினும், பயணப் பாதையை மாற்ற விரும்பும் பயணிகள் தங்களின் பயணச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும்; ஏனெனில் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் பயன்படுத்தப்படும் டிக்கெட் அமைப்பு வேறுபட்டது.[4]

நவம்பர் 1, 2011 முதல், கோலாலம்பூரில் இருந்து இங்குள்ள பல்வகை போக்குவரத்து முனையத்திற்கு தொடருந்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

பல்வகை போக்குவரத்து முனையம்

[தொகு]

9-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம், தெற்கு நோக்கிச் செல்லும் விரைவுப் பேருந்துகளுக்கான போக்குவரத்து மையமாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகள் இங்கு மாற்றப்பட்டன. RM 570 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட பல்வகை போக்குவரத்து முனையம், 1 சனவரி 2011 முதல் இயங்குகிறது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. DARUS, YIP YOKE TENG Photos ROHAIZAT MD. "Historian J.M. Gullick, in the book A History of Kuala Lumpur, said the enormous Sungai Besi mine was one of the largest man-made holes in the world, covering 12 acres at surface level and 2.5 acres at the working level 80 feet below". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 January 2023.
  2. "With its pre-war buildings and ex-military community still intact, the town quietly thrives in its safe little bubble". Time Out Kuala Lumpur. பார்க்கப்பட்ட நாள் 21 January 2023.
  3. Chia Mui Wee (1998). Persepsi pengguna terhadap penggunaan perkhidmatan pengangkutan Sistem Transit Aliran Ringan. Universiti Malaya: Bahagian Pentadbiran Perniagaan,Fakulti Ekonomi dan Pentadbiran, Universiti Malaya. p. 87.
  4. "Bandar Tasik Selatan LRT Station is a Malaysian interchange station located next to and named after Bandar Tasik Selatan, in Kuala Lumpur, the capital city of Malaysia. The station serves as both a stop and interchange for KTM Komuter, Sri Petaling Line, and the Express Rail Link's KLIA Transit & KLIA Ekspres trains, and RapidKL buses". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 10 August 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]