பண்டார் துன் உசேன் ஓன்

பண்டார் துன் உசேன் ஓன்
Bandar Tun Hussein Onn
பண்டார் துன் உசேன் ஓன் தொடருந்து நிலையம்
பண்டார் துன் உசேன் ஓன்
தொடருந்து நிலையம்
Map
ஆள்கூறுகள்: 3°2′32.59″N 101°44′39.85″E / 3.0423861°N 101.7444028°E / 3.0423861; 101.7444028
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு லங்காட் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00

பண்டார் துன் உசேன் ஓன் (ஆங்கிலம்: Bandar Tun Hussein Onn; மலாய்: Bandar Tun Hussein Onn) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் செராஸ் 11-ஆவது மைலில் (Batu 11 Cheras) உள்ள புற நகரப்பகுதி ஆகும். இது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தென்கிழக்கே 13 கிமீ தொலைவிலும் காஜாங்கிற்கு வடக்கே 7.5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

பொதுவாகவே பண்டார் துன் உசேன் ஓன், ஒரு குடியிருப்பு பகுதி ஆகும்; 1990-களின் முற்பகுதியில் நிறுவப்பட்டது. இங்கு ஒரு எம்ஆர்டி தொடருந்து நிலையம் (MRT Bandar Tun Hussein Onn) உள்ளது.[1]

பொது

[தொகு]

பண்டார் துன் உசேன் ஓன் நகரத்தின் மேம்பாட்டாளர்கள் உடா ஓல்டிங்சு நிறுவனத்தார் (UDA Holdings Bhd) ஆகும். இந்த நிறுவனம் 1971-இல் மலேசிய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. 1989ஆம் ஆண்டில், செராஸ் பகுதியில் 752 ஏக்கர் (304 எக்டேர்) நிலத்தை கையகப்படுத்தி பண்டார் துன் உசேன் ஓன் நகரத்தை உருவாக்கியது.[2]

தெற்கு செராஸ் பகுதியில் மிகப்பெரிய வீட்டு மனைத் திட்டமாக அறியப்படுகிறது. இங்கு 6,000 குடியிருப்பு மனைகள் உள்ளன; மொத்த மக்கள் தொகை 35,000 ஆக உள்ளது.

தொடருந்து நிலைய காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bandar Tun Hussein Onn MRT Station, located in Bandar Tun Hussein Onn, 9th-Mile Cheras (Batu 9 Cheras), Jalan Cheras. Nested within Kajang and Balakong. The Station started operation on 16 December 2016". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 19 August 2023.
  2. "The Urban Development Authority (UDA) was established by the government on 12 November 1971". www.uda.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 August 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]