பண்டார் துன் ரசாக் (P124) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Bandar Tun Razak (P124) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 119,185 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | பண்டார் துன் ரசாக் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; பண்டார் துன் ரசாக், புடு, சுங்கை பீசி , மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, காஜாங் |
பரப்பளவு | 25 ச.கி.மீ[2] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | வான் அசிசா வான் இசுமாயில் (Wan Azizah Wan Ismail) |
மக்கள் தொகை | 191,318 (2020) [3] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4] |
பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bandar Tun Razak; ஆங்கிலம்: Bandar Tun Razak Federal Constituency; சீனம்: 敦拉萨镇国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P124) ஆகும்.
பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி. உயர்க்கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த நகரத்திற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பண்டார் துன் ரசாக், சுங்கை பீசி உத்திநோக்கு மண்டலத்தில் (Bandar Tun Razak - Sungai Besi Strategic Zone) அமைந்து உள்ளது.[5]
பண்டார் துன் ரசாக் 1970-களில், கோலாலம்பூரில் ஒரு சிறிய நகரமாக இருந்தது. முன்னர் காலத்தில் கம்போங் காங்கோ (Kampung Konggo; Congo Village) என்று அழைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் 1960-ஆம் ஆண்டுகளில், காங்கோ குடியரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற மலேசிய இராணுவ வீரர்களுக்கான குடியேற்றப் பகுதியாக இருந்தது.[6]
1984 பிப்ரவரி 1-ஆம் தேதி மலேசியக் கூட்டாட்சி பிரதேசத்தின் 10-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது மலேசியாவின் நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பின் முகமது அவர்களால், கம்போங் காங்கோ என்பது பண்டார் துன் ரசாக் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது.
பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1994-ஆம் ஆண்டில் சுங்கை பீசி; செபுத்தே மக்களவைத் தொகுதிகளில் இருந்து பண்டார் துன் ரசாக் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P112 | 1995–1999 | தான் சாய் கோ (Tan Chai Ho) |
பாரிசான் (மலேசிய சீனர் சங்கம்) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P124 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | காலீட் இபராகீம் (Khalid Ibrahim) |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) | |
13-ஆவது மக்களவை | 2013–2014 | |||
2014–2018 | சுயேச்சை | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | கமாருதீன் ஜாபார் (Kamarudin Jaffar) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) | |
2020–2022 | பெரிக்காத்தான் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது | வான் அசிசா வான் இசுமாயில் (Wan Azizah Wan Ismail) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
119,185 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
93,845 | 78.74% | ▼ - 6.35% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
93,021 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
252 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
572 | ||
பெரும்பான்மை (Majority) |
9,817 | 10.56% | ▼ - 17.83 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[7][8] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
வான் அசிசா வான் இசுமாயில் (Wan Azizah Wan Ismail) |
பாக்காத்தான் | 93,021 | 43,476 | 46.74% | - 11.82 % ▼ | |
கமாருதீன் ஜாபார் (Kamarudin Jaffar) |
பெரிக்காத்தான் | - | 33,659 | 36.18% | + 36.18% | |
சியூ இன் கீன் (Chew Yin Keen) |
பாரிசான் | - | 15,886 | 17.08% | - 13.11% ▼ |