பதினேழாம் இராமவர்மா

பதினேழாம் இராமவர்மா (Rama Varma XVII) (1861 - 23 மே 1941) இவர் 25 மார்ச் 1932 முதல் 23 மே 1941 வரை கொச்சி இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்தார்.[1]

ஆட்சி

[தொகு]

பதினாறாம் இராம வர்மாவின் இறப்பிற்குப் பின் இவர்அரியணை ஏறினார். இவரது ஆட்சிக் காலத்தில் கொச்சி துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும், எர்ணாகுளம் உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது. இவர் மத மற்றும் ஆன்மீக விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

இறப்பு

[தொகு]

இராம வர்மா 23 மே 1941 அன்று கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சொவ்வரையில் இறந்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "List of rulers of Kochin". worldstatesmen.org.