பதிராமணல்
പാതിരാമണൽ | |
---|---|
தீவு | |
ஆள்கூறுகள்: 9°37′7″N 76°23′6″E / 9.61861°N 76.38500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழா |
அரசு | |
• நிர்வாகம் | ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 688525[1] |
வாகனப் பதிவு | KL-32,[2] |
அருகில் உள்ள நகரம் | ஆலப்பழா, குமரகம் (கோட்டையம் மாவட்டம்) |
பதிராமணல் (Pathiramanal,) மலையாளம்: പാതിരാമണൽ ) என்பது ஒரு சிறிய தீவு ஆகும். [3] இது கேரளத்தின், அலப்புழா மாவட்டத்தின், முஹம்மா ஊராட்சியில் உள்ளது. பதிராமணல் என்ற சொல்லுக்கு 'இரவின் மணல்' என்று பொருள் ஆகும். ஏரியின் இருபுறமும், தீவின் அழகும் மனதைக் கவரும். இங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல அரிய வகை பறவைகள் வலசை வருகின்றன.
பதிராமணல் தீவானது 28.505 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இது முஹம்ம படகுத் துறையில் இருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவிலும், ஆலபுழாவிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேக்கர் பங்களாவிற்கு அருகில் உள்ள படகு துறையில் இருந்து தீவுக்கான தூரம் சுமார் 5 கி.மீ ஆகும். மேலும் குமரகத்தில் இருந்து வடமேற்கில் 4 கி.மீ. தொலைவில் இத்தீவு உள்ளது.
இந்த தீவு ( அனந்த பத்மநாபன் தோப்பு என்றும் அழைக்கப்படுகிறது) செவாலியர் ஏ.சி.எம் அந்த்ராப்பர் என்பவரால், கொச்சின் M / s பீம்ஜி தேவ்ஜி அறக்கட்டளையிடம் இருந்து வாங்கப்பட்டது. மேலும் இது எழுபதுகளின் பிற்பகுதி வரை தைமத்ததில் குடும்பத்துக்குச் சொந்தமான தனியார் சொத்தாக இருந்தது. 1979 ஆம் ஆண்டில் கேரள அரசால் நிலச் சீர்திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, தீவு அரசாங்கத்தின் உரிமையின் கீழ் வந்தது. காரணம் நில உச்சவரம்பைக் கடந்த உபரி நிலமாக இந்தத் தீவு இருந்ததால் அரசுவசம் வந்தது. பின்னர் இது சுற்றுலாத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது மேலும் இதை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடும் யோசனை பரிசீலனையில் இருந்தது. தற்போது தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் எழுபதுகளின் பிற்பகுதி வரை 14 தொழிலாளர் குடும்பங்கள் தீவில் வசித்து வந்தன, பின்னர் இந்த குடும்பங்களுக்கு முஹம்மா ஊராட்சியின் பிரதான நிலப்பரப்பில் மறுவாழ்வு தரப்பட்டது.
இந்த தீவு வேம்பநாட்டு ஏரியில் அமைந்துள்ளது. இது 9°36′54″N 76°23′1″E / 9.61500°N 76.38361°E இல் உள்ளது. [4]
இந்த தீவுக்கு ஆலப்புழா நகரத்திலிருந்து மோட்டார் படகு மூலம் ஒரு மணி நேர பயணத்தில் அல்லது விரைவுப் படகு மூலமாக 30 நிமிட நேரத்தில் சென்றடையலாம். மேலும் முஹம்மா - குமரகம் நீர் வழிப் பாதையில் செல்லும் படகுகளைஇலும் இங்கு செல்லலாம். முஹம்ம -குமரகம் நீர்வழிப் பாதையில் பயணிக்கும் எஸ்.டபிள்யூ.டி.டி படகுகள் பதிரமணலில் நிற்காது . குமரகமில் இருந்து பதிராமணலை அடைய சுமார் 40 நிமிடங்கள் ஆகும். வேம்பநாட்டு ஏரி வழியாக செல்லும் பயணம் ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். கதிப்புரம் படகு துறையில் இருந்து ஒரு படகை வாடகைக்கு எடுத்துக்கொள்வதே பதிரமணலை அடைய சிறந்த வழியாகும், இது அலப்புழா - தன்னிர்முக்கம் சாலையில் உள்ள கெயிப்புரம் சந்திக்கு கிழக்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள தொடருந்து நிலையம் : ஆலப்புழா
அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் : கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஆலப்புழாவில் இருந்து சுமார் 85 கி.மீ வடக்கில் மற்றும் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 150 கி.மீ. தெற்கு.
இந்த்த் தீவு பறவை நோக்கர்களின் சொர்க்கமாகும். இங்கு சுமார் 91 உள்ளூர் பறவை இனங்கள் மற்றும் 50 புலம் பெயர்ந்த பறவைகள் உள்ளன. இங்கு காணப்படும் சில பறவை இனங்கள்: ஊசிவால் வாத்து, கிளுவை, நைட் ஹெரான், நீர்க்காகம், பாம்புத் தாரா, கொண்டை நீர்க்காகம், செந்நாரை, கடல் புறா, ஆலா, பெரிய எக்ரெட்டுகள், வெண் கொக்கு, உண்ணிக்கொக்கு, குளத்துக் கொக்கு, சின்னக் கொக்கு, நீளவால் தாழைக்கோழி மற்றும் தாமிர இறக்கை இலைக்கோழி ஜகானாக்கள், தடித்த அலகு மீன்கொத்தி, தண்ணீர்க் கோழி, விசில் வாத்து, குள்ளத்தாரா, சின்ன நீர்க்காகம் மற்றும் மீசை ஆலா . சிலர் மன்னர் ஃப்ளை கேட்சரைப் பார்த்ததாகக் கூட தெரிவித்துள்ளனர்.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)