பதுகம்மா | |
---|---|
பிற பெயர்(கள்) | தெலங்காணாவின் மலர்த் திருவிழா |
கடைபிடிப்போர் | இந்தியாவின் தெலங்காணா மாநிலம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பெண்களால் கொண்டாடப்படுவது. |
வகை | கௌரிக்கான வசந்த விழா |
கொண்டாட்டங்கள் | 9 நாட்கள் |
அனுசரிப்புகள் | b |
தொடக்கம் | மாகாளய அமாவாசை, பித்தரு அமாவாசை |
முடிவு | துர்காஷ்டமி |
நாள் | செப்டம்பர்/அக்டோபர் |
நிகழ்வு | ஆண்டு |
தொடர்புடையன | தசரா |
பதுகம்மா (Bathukamma) என்பது தெலங்காணாவில் இந்து பெண்களால் கொண்டாடப்படும் ஒரு மலர்த் திருவிழா ஆகும்.[1][2] இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் சாலிவாகன ஆண்டு நாட்காட்டியின்படி ஒன்பது நாட்கள் பத்ரபத அமாவாசை (பித்ரு பட்சம் அமாவாசை) அன்று துவங்கி துர்காஷ்டமிவரை கொண்டாடப்படுகிறது. இது கிரிகேடியன் நாட்காட்டியில் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் வரும். நவராத்திரியின்போது பதுகம்மா விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகாலயா அமாவசை நாளில் தொடங்கும் இந்த விழா. 9 நாள் கொண்டாட்டங்களுடன் "சதுலா பதுகம்மா" அல்லது "பெட்ட பதுகம்மா" விழாவுடன் தசராவுக்கு இரு நாடகளுக்கு முன் முடிவடையும்.
பதுகம்மா விழாவானது தெலங்காணாவின் கலாச்சார உணர்வைப் பிரதிபலிக்கிறது.[3][4] பதுகம்மா என்பது அழகிய மலர்க் குவியல் ஆகும், இது மருத்துவ குணங்கள் கொண்ட பல்வேறு வகையான மலர்களால் கோபுர வடிவில் ஏழு அடுக்குகளாக அமைக்கப்படுகிறது. தெலுங்கில், ‘பதுங்கம்மா' என்பதன் பொருள் ‘அம்மனே வருக’ என்பதாகும், மேலும் பெண்களின் காவல் தெய்வமான மகா கௌரியை, பதுகம்மா வடிவில் வணங்குகின்றனர். இது ஆந்திரத்தில், விசாகப்பட்டிணம் போன்ற சில நகரங்களில் கொண்டாடப்படுகிறது.
இது பெண்களின் விழா ஆகும். இந்த சிறப்பு நிகழ்வில் பெண்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து நகைகள் மற்றும் இதர ஆபரணங்களுடன் ஒன்று சேர்கின்றனர். பருவவயது பெண் மக்கள் பாவாடை-ஒனி/பாவாடை-தாவணி/பாவாடைச் சட்டை போன்றவற்றை அணிகலன்களுடன் அணிந்து பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றனர். 2017 ஆண்டு இந்த விழா செப்டம்பர் 20 - 28 ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.[5]
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)Check date values in: |access-date=, |archive-date=
(help); External link in |website=
(help)