பதேபூர் | |
---|---|
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் பதேபூரின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°10′N 81°13′E / 27.17°N 81.22°E | |
நாடு | India |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பாராபங்கி |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
ஏற்றம் | 140 m (460 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 35,582 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 225305 |
தொலைபேசி குறியீடு | 05240 |
வாகனப் பதிவு | UP-41 |
பாலின விகிதம் | 50/48 ♂/♀ |
இணையதளம் | barabanki |
பதேபூர் (Fatehpur), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் அமைந்த பதேபூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். [2] பதேபூர் மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடகிழக்கே 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 16 வார்டுகளும், 5617 வீடுகளும் கொண்ட பதேபூர் பேரூராட்சியின் மக்கள் தொகை 35,582 ஆகும். அதில் ஆண்கள் 18,649 மற்றும் 16,933 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4963 (14%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 68.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,767 மற்றும் 0 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 33.48%, இசுலாமியர் 65.51%, சமணர்கள் 0.75, கிறித்தவர்கள் 0.17% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[3]
பதேபூர் இரயில் நிலையத்திலிருந்து சண்டிகர், தில்லி, லக்னோ, கான்பூர், அலகாபாத், வாரணாசி போன்ற நகரங்களுக்கு இருப்புப் பாதைகள் உள்ளது.[4]