பதேபோரா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 33°39′22″N 75°09′37″E / 33.656027°N 75.160375°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பிரதேசம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | அனந்தநாக் |
Settled | கி.மு.5000 |
ஏற்றம் | 1,600 m (5,200 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 6,737 |
மொழிகள் | |
• அலுவல் | காஷ்மீரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி இணைப்பு எண் | 91-1932 |
வாகனப் பதிவு | ஜேகே03 |
பாலின விகிதம் | 912 ♂/♀ |
கல்வியறிவு | 60.00% |
இணையதளம் | anantnag |
பதேபோரா (Fatehpora) பதேபுரா என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப்பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பொருளாதார மையப் பகுதியாகும். இது 33.65 °வடக்கிலும் 75.16 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் (5478 அடி) உயரத்தில் உள்ளது. [2]
2011 இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [3] இதன் மக்கள் தொகை 6,737 என்ற அளவில் இருந்தது. இதில் 51% ஆண்களும் 49% பெண்களும் இருந்தனர். நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 60% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 67% , பெண்களின் கல்வியறிவு 53% என உள்ளது. நகரில், 17% மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள். இங்கு வசிக்கும் அனைத்து நபர்களும் சுன்னி இசுலாமியர்கள் .
பதேபுரா, சிறீநகரிலிருந்து 65 கிலோமீட்டர் (40 மைல்) தொஅலைவில் அமைந்துள்ளது. பாபடர், கான் போரா, கபாமார்க், குந்த் பதேபோரா மற்றும் குச்சிபோரா போன்ற முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. இதன் அருகில் பிரிங்கி நதி ,சாண்ட்ரான் போன்ற ஆறுகள் உள்ளது. இதன் விளைவாக வரும் நதிக்கு வெத் அல்லது ஜீலம் என்று பெயரிடப்பட்டது.
சாதுரா தொடர் வண்டி நிலையம் மற்றும் அனந்த்நாக் தொடர் வண்டி நிலையம் ஆகியவை பதேபோராவிற்கு மிக அருகில் உள்ள தொடர் வண்டி நிலையங்களாகும். இருப்பினும், எப்போதும் ஜம்மு தொடர் வண்டி நிலையம் முக்கிய ரயில் நிலையமாகும். இது பதேபுராவுக்கு 243 கி. மீ. தொலைவிலுள்ளது.