பத்து காவான்

பத்து காவான்
Batu Kawan
பினாங்கு
பத்து காவான் விளையாட்டு அரங்கம்
பத்து காவான் விளையாட்டு அரங்கம்
Map
பத்து காவான் is located in மலேசியா
பத்து காவான்
      பத்து காவான்
ஆள்கூறுகள்: 5°13′52.32″N 100°26′38.97″E / 5.2312000°N 100.4441583°E / 5.2312000; 100.4441583
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்தென் செபராங் பிறை மாவட்டம்
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்கஸ்தூரி பட்டு
ஏற்றம்
4 m (13.1 ft)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00

பத்து காவான் (ஆங்கிலம்: Batu Kawan; மலாய்: Batu Kawan) மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் இந்த நகரத்தை பினாங்கு மாநிலத்தின் பாயான் லெப்பாஸ் மற்றும் பிறை தொழில்துறை நகரத்தைப் போல மாற்றம் செய்வதற்கு பினாங்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் ஜோர்ஜ் டவுன் தலைநகர்ச் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பால் பத்து காவான் நகரத்தை, ஜோர்ஜ் டவுன் மாநகரத்தின் துணைநகரமாக மாற்றுவதற்கு பினாங்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பொது

[தொகு]

சர்க்கரை தோட்டங்கள்

[தொகு]

பத்து காவான் நகரம், புவியியல் ரீதியாக செபராங் பிறை (Seberang Perai) நகரத்தில் இருந்தும்; மற்ற பகுதிகளில் இருந்தும் தனி ஒரு தீவு நகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜாவி ஆறு (Jawi River); மற்றும் தெங்கா ஆறு (Tengah River); ஆகிய ஆறுகளால் பிரிக்கப் படுவதால் பத்து காவான் நகரம் ஒரு தீவு நகரமாக (Island City) கருதப்படுகிறது.

19-ஆம் நூற்றாண்டில் பத்து கவான் ஒரு விவசாய கிராமமாக இருந்தது. அப்போது பத்து கவான் பகுதி சர்க்கரை, தேங்காய் மற்றும் ரப்பர் தோட்டங்களின் தாயகமாக இருந்தது.[1][2] குறிப்பாக, 1796-ஆம் ஆண்டிலேயே சீனர் மற்றும் இந்தியர் குடியேற்றக்காரர்களால் சர்க்கரைத் தோட்டங்கள் நடத்தப்பட்டன.[3]

இராமசாமி பழனிச்சாமி

[தொகு]

பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி ஜனநாயக செயல் கட்சியின் பத்து காவான் மக்களவை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2008-ஆம் ஆண்டு மலேசிய பொதுத் தேர்தலில் பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூன் என்பவரைத் தோற்கடித்தார்.

கஸ்தூரி பட்டு

[தொகு]
பத்து காவான்; பத்து மூசாங் படகுத் துறையில் கஸ்தூரி ராணியின் வரவேற்பு பதாகை

2013 மலேசிய பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடவில்லை. இம்முறை ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு பத்து காவான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப்பெண் உறுப்பினர் ஆவார்.

பினாங்கு இரண்டாவது பாலம்

[தொகு]

பினாங்கு இரண்டாவது பாலம், பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tiny island of historical gems – Community The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2018-03-27.
  2. "Let Them Not Crumble". Let Them Not Crumble. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
  3. "Let Them Not Crumble". Let Them Not Crumble. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.