பத்து பகாட் (P150) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Batu Pahat (P150) Federal Constituency in Johor | |
பத்து பகாட் மக்களவைத் தொகுதி (P150 Batu Pahat) | |
மாவட்டம் | பத்து பகாட் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 133,910 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பத்து பகாட் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பத்து பகாட்; பண்டார் பெங்காராம் |
பரப்பளவு | 446 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1955 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | ஓன் அபு பக்கார் (Onn Abu Bakar) |
மக்கள் தொகை | 166,000 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1955 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பத்து பகாட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu Pahat; ஆங்கிலம்: Batu Pahat Federal Constituency; சீனம்: 峇株巴辖国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P150) ஆகும்.[5]
பத்து பகாட் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1955-ஆம் ஆண்டில் இருந்து பத்து பகாட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பத்து பகாட் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமுமான பத்து பகாட் நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 239 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 50 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 52 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.
இந்த மாவட்டத்திற்கு வடமேற்கில் மூவார் மாவட்டம்; தென்கிழக்கில் குளுவாங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; ஆக வடக்கில் சிகாமட் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன.
பத்து பகாட் நகரம், அண்மையில் பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) எனும் புதுப் பெயரைப் பெற்றது. இந்த நகரம் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இப்போது ஜொகூர் பாருவுக்கு அடுத்த நிலையில் ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.
பத்து பகாட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1955 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பத்து பகாட் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
கூட்டரசு சட்டமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | 1955–1957 | செல்வசிங்கம் மெக்கந்தையர் (Chelvasingam Maclunthlyre) |
மலேசிய கூட்டணி (மலேசிய இந்திய காங்கிரசு) | |
1957–1959 | சையது எசா அல்வி (Syed Esa Alwee) |
மலேசிய கூட்டணி (அம்னோ) | ||
மலாயா மக்களவை | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P093 | 1959–1963 | காங் கோக் செங் (Kang Kok Seng) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P093 | 1963–1964 | காங் கோக் செங் (Kang Kok Seng) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | சோ ஆ தெக் (Soh Ah Teck) | ||
1969–1971 | மக்களவை இடைநிறுத்தம்[8] | |||
3-ஆவது மக்களவை | P093 | 1971–1973 | சோ ஆ தெக் (Soh Ah Teck) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
1973–1974 | பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |||
4-ஆவது மக்களவை | P111 | 1974–1978 | அப்துல் ஜலால் அபு பக்கர் (Abdul Jalal Abu Bakar) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | டாவுட் தாகா (Daud Taha) | ||
7-ஆவது மக்களவை | P125 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P135 | 1995–1999 | மன்சூர் மசிகோன் (Mansor Masikon) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | சியாம் காசுரின் (Siam Kasrin) | ||
11-ஆவது மக்களவை | P150 | 2004–2008 | சுனைடி அப்துல் வகாப் (Junaidy Abdul Wahab) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | முகமட் புவாட் சர்காசி (Mohd Puad Zarkashi ) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | முகமட் இட்ரிஸ் ஜுசி (Mohd Idris Jusi) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018–2020 | முகமட் ரசீட் அசுனோன் (Mohd Rashid Hasnon) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | ஓன் அபு பக்கர் (Onn Abu Bakar) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ஓன் அபு பக்கர் (Onn Abu Bakar) | பாக்காத்தான் அரப்பான் | 45,242 | 45.47 | 10.45 ▼ | |
முகமட் ரசிட் அசுனோன் (Mohd Rashid Hasnon) | பெரிக்காத்தான் நேசனல் | 29,270 | 29.42 | 29.42 | |
இசாக் @ முகமட் பாரிட் சிராஜ் (Ishak @ Mohd Farid Siraj) | பாரிசான் நேசனல் | 24,309 | 24.43 | 9.70 ▼ | |
நிசாம் பசீர் அப்துல் கரீம் பசீர் (Nizam Bashir Abdul Kariem Bashier) | உள்நாட்டு போராளிகள் கட்சி | 410 | 0.41 | 0.41 | |
சகாரி ஒசுமான் (Zahari Osman) | மலேசிய மக்கள் கட்சி | 263 | 0.26 | 0.26 | |
மொத்தம் | 99,494 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 99,494 | 98.82 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,185 | 1.18 | |||
மொத்த வாக்குகள் | 1,00,679 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,33,910 | 75.20 | 9.61 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)