பத்தேமா அக்பரி فاطمه اکبری | |
---|---|
பிறப்பு | 1974 தாய்க்குந்தி மாகாணம், ஆப்கானித்தான்[1] |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆப்கானித்தானின் அமெரிக்கப் பல்கலைக்கழகம்[2] |
விருதுகள் | 10,000 பெண் தொழில்முனைவோர் சாதனை விருது |
பதேமா அக்பரி (Fatema Akbari)[3] ஆப்கானித்தானித்தானிச் சேர்ந்த ஓர் தொழில்முனைவோரும், பெண்களின் வழக்கறிஞரும் ஆவார். இவர் குலிஸ்தான் சதகாத் நிறுவனம், அரசு சாரா நிறுவனமான பெண்கள் விவகார அமைப்பு ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். 2011இல் இவர் கோல்ட்மேன் சாக்ஸ்-நிதியுதவி வழங்கப்பட்ட 10,000 பெண் தொழில்முனைவோர் சாதனை விருதைப் பெற்றார்.[3] [4]
1999இல் தனது கணவரின் மரணத்தைத் தொடர்ந்து தனது குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக பதேமா அக்பரி தச்சுத் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்.[5] முதலில் ஈரானில் கட்டிடத் தளங்களில் பணிபுரிந்தார். அங்கு தலிபான்கள் ஆப்கானித்தானைக் கைப்பற்றியபோது இவரது குடும்பம் தப்பி ஓடியது.[3] 2003இல் இவர் தாயகம் திரும்பினார் . மேலும், காபூலில் ஒரு தச்சுப் பள்ளியான குலிஸ்தான் சதகாத் என்ற நிறுவனத்தை நிறுவி மரச்சாமான்கள் உற்பத்தித் தொழிலைத் தொடங்கினார்.[6] ஆப்கானித்தானில் மோதலின் போது கொல்லப்பட்ட அல்லது ஊனமுற்ற ஆண்களின் மனைவிகளுக்கு சம்பாதிப்பதற்கான வழிமுறையாக இவர் ஒரு தொழிலாளர் தளத்தை வழங்க முயன்றார்.[7] 2009 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கோல்ட்மேன் சாக்ஸ்-நிதியுதவி வழங்கப்பட்ட 10,000 பெண்கள் திட்டத்தில் சேர்ந்தார்.[3] இது வணிகக் கல்வி, வழிகாட்டுதல், வலைப்பின்னல் ஆகியவற்றின் மூலம் உலகளவில் பின்தங்கிய பெண் தொழில்முனைவோருக்கு மூலதனத்தை அணுகுவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரங்களை வளர்க்க உதவும் திட்டமாகும்.[8]
அக்பரி, தனது செயல்பாடுகளிலும் பெண்களின் கல்வியறிவு வகுப்புகளையும் விரிவுபடுத்துவதிலும், உள்ளூர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் பணியாற்ற முடிந்தது. மேலும், "பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில் எந்த தவறும் இல்லை என்றும் இதனை கண்காணிக்க, தலிபான்கள் நாட்டில் ஈடுபடுவது நல்லது " என்றும் கூறினார்.[9]
2004ஆம் ஆண்டில், பதேமா அக்பரி, ஆப்கானித்தானின் அரசு சார்பற்ற அமைப்பான "மகளிர் விவகார அமைப்பை" நிறுவி, மனித உரிமைகள் பற்றி இருபாலருக்கும் கல்வி கற்பதோடு, கைவினைப் பொருட்களிலும் பெண்களுக்கு பயிற்சி அளித்தார்.[10] தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் தன்னுடைய சொந்த வணிகத்திற்கும் இடையில், 2011ஆம் ஆண்டு நிலவரப்படி இவர் ஆப்கானித்தான் முழுவதும் 5,610 பேருக்கு பயிற்சி அளித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [10]
2011 ஏப்ரல் 12 அன்று அக்பரிக்கு உலகளாவிய தலைமை விருதுகளில் 10,000 பெண் தொழில்முனைவோர் சாதனை விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்வில், பல முக்கிய குரல்கள் இவரை பாராட்டின:
"மற்ற ஆப்கானிய பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தன்னுடைய தச்சுத் தொழிலால் வழங்கப்படும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மூலமும் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பெண்களுக்கு இவரது அரசு சாரா அமைப்பு வழங்கிய எழுத்தறிவு மற்றும் திறன் பயிற்சி ஆகிய இவருடைய பணிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது ".[3]
30-31 மார்ச் 2011 இல், அமெரிக்காவின் டெக்சஸின் டாலாஸில் 2 நாள் மாநாட்டில் அக்பரி குழு உறுப்பினராக இருந்தார். முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் மற்றும் ஆப்கானிததான் குடியரசுத் தலைவர் ஹமீத் கர்சாய் ஆகியோர் இவரது ஆப்கானித்தானின் எதிர்காலத்தை உருவாக்குதல்: பெண்கள் சுதந்திரத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் பொருளாதார வாய்ப்பை மேம்படுத்துதல் போன்ற பணிகளைக் குரிப்பிட்டனர்.[11]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)