பத்மநாபன் பலராம்(பி 1949), பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் தற்போதைய நெறியாளர் ஆவார்.
பலராம், கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புக்கு முன் புணேவில் உள்ள பெர்கூசன் கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர், கார்னிகே மெல்லான் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தன்னுடைய பின்முனைவர் பட்ட ஆராய்ச்சியை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு வென்ற ராபர்ட் வுட்வார்டுடன் பணியாற்றினார். பின்முனைவர் பட்டம் நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்பி இந்திய அறிவியல் நிறுவனத்தில் மூலக்கூற்று உயிர்-இயற்பியல் பிரிவில் (Molecular Biophysics Unit) பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.