பத்ரி பிரசாத் பஜோரியா Badri Prasad Bajoria | |
---|---|
பிறப்பு | 1925 சகாரன்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 1976 |
பணி | சமூக சேவகர், பரோபகாரி |
பெற்றோர் | பால்தேவ் தாசு பஜோரியா கமலா தேவி |
வாழ்க்கைத் துணை | சாவித்ரி தேவி |
விருதுகள் | பத்மசிறீ |
பத்ரி பிரசாத் பஜோரியா (Badri Prasad Bajoria)(1925 – 1976) என்பவர் இந்தியச் சமூக சேவகர், பரோபகாரர், கல்வியாளர் மற்றும் ஸ்ரீ பல்தேவ் தாசு பஜோரியா இடைநிலைக் கல்லூரி, கமலா தேவி பஜோரியா பட்டக் கல்லூரி மற்றும் சேத் பல்தேவ் தாஸ் பஜோரியா மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றின் நிறுவனர் ஆவார்.[1] இவர் 1925-ல் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சகாரன்பூரில் கமலா தேவி மற்றும் பல்தேவ் தாசு பஜோரியா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பஜோரியா சாவித்ரி தேவியை மணந்தார்.[2] இவர் ஸ்ரீமதி கமலா தேவி சரசுவதி சிசு மந்திர், பஜோரியா சனாதன் தரம் சங்கீர்தன் பவன் மற்றும் காந்தி நூற்றாண்டு கமலா தேவி பஜோரியா நினைவு கன்னா கண் மருத்துவமனை போன்ற நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆவார்.[1] இந்திய அரசால் 1972-ல் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[3]