பத்ர்-உன்-நிசா பேகம் Badr-un-Nissa Begum | |||||
---|---|---|---|---|---|
இளவரசி | |||||
பிறப்பு | 27 நவம்பர் 1647 தில்லி, முகலாய பேரரசு | ||||
இறப்பு | 9 ஏப்ரல் 1670 தில்லி, முகலாய பேரரசு | (அகவை 22)||||
| |||||
மரபு | திமுரிட் வம்சம் | ||||
தந்தை | அவுரங்கசீப் | ||||
தாய் | நவாப் பாய் | ||||
மதம் | சன்னி இசுலாம் |
பத்ர்-உன்-நிசா பேகம் (Badr-un-Nissa Begum) முகலாய பேரரசர் அவுரங்கசீப்பிற்கும் அவரது இரண்டாம் மனைவி நவாப் பாய்க்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். முகலாய இளவரசியான இவருடைய காலம் 1647 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 முதல் 1670 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்பது வரையிலுள்ள காலமாகும். [1]
பத்ர்-உன்-நிசா என்பதற்கு அரேபிய மொழியில் "பெண்களிடையே முழு நிலவு" என்பது பொருளாகும்.
பத்ர்-உன்-நிசா பேகம் 1647 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதியன்று அவரது தாத்தா பேரரசர் சாஜகான் ஆட்சியின் போது பிறந்தார். சம்மு மற்றும் காசுமீரில் இருந்த இயரால் ராசபுத்திர வம்சத்தைச் சேர்ந்த காசுமீரைச் சேர்ந்த இளவரசி நவாப் பாய் இவருடைய தாயார் ஆவார். அவுரங்கசீப் நவாப்பாய் தம்பதியரின் மூன்றாவது மற்றும் கடைசி குழந்தையே பத்ர்-உன்-நிசா பேகம். இளவரசர் முகமது சுல்தானும் இளவரசர் முகம்மது முவாசும் (எதிர்கால பேரரசர் பகதூர் சா I) இவரது மூத்த உடன்பிறப்புகள் ஆவர். 1659 ஆம் ஆண்டு அவுரங்கசீப்பின் இரண்டாவது முடிசூட்டு விழாவின் போது பத்ர்-உன்-நிசாவுடன் 160,000 ரூபாய்கள் வெகுமதியாக அவுரங்கசீப்பிற்கு வழங்கினர்.[2]
பத்ர்-உன்-நிசா பேகம் தனது சகோதரிகளை விட அதிகம் படித்தவர் என்று கூறப்படுகிறது. இவர் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். [2] தந்தையின் வற்புறுத்தலின் பேரில் நம்பிக்கை பற்றிய புத்தகங்களைப் படித்தார். பல நற்காரியங்கள் செய்து தன் வாழ்நாளைக் கழித்தார்.[3] அற்புதமான இவரது குணாதிசயங்கள், ஆசாரம் மற்றும் கனிவான இதயம் ஆகியவற்றால் அவுரங்கசீப்பால் பெரிதும் விரும்பப்பட்டார்.[4] தனது தந்தையின் ஆட்சியின் பதின்மூன்றாவது ஆண்டில் 9 ஏப்ரல் 1670 அன்று இருபத்தி இரண்டு வயதில் திருமணமாகாமல் இறந்தார். [5] இவரது மரணத்தில் அவுரங்கசீப் பெரிதும் வருத்தமடைந்தார்.[6]